அம்மணமாக திரிந்த மனித குலம், நாகரிகம் வளர வளர ஆடையை அணியத் துவங்கியது. தாய்வழி சமூகம் தந்தைவழி சமூகமாக மறுவியது. காடுகளில் நாடோடிகளாக சுற்றி திரிந்து நாகரிகம் அடைந்த மனித குலம் ஜாதி கட்டமைப்புக்குள் ஆளுமை அதிகாரம் என்ற மதில் சுவர் எழுப்பிவிட்டது. ஜாதி மையமாக கொடுங்கோல் அட்சி நடந்தாலும் அதனின் மயம் கூட பெண் தான்.
சமூகம் இந்த ஜாதி வகமையிலும் அவர்கள் பிரித்திருக்கும் எல்லா ஜாதிகளிலும் ஆண் இனத்தை ஆளுமையாகவும் பெண் இனத்தை அடிமையாகவும் சித்தரித்துவிட்டனர். பெண்ணின் முலைக்கு வரி விதைக்கும் அரசு ஆணின் உறுப்புகளுக்கு ஏன் வரி விதிக்கவில்லை? அவர்களின் உறுப்புகளுக்கும் வரி விதித்து வசுலை பெருக்கி கஜானாவை நிறப்பிக் கொள்ள ஏன் சட்டம் அமைக்கவில்லை.
ஏன்னெனில் சட்டங்களை வகுப்பவன் செயல்படுத்துபவன் ஆண். ஆதலால் அனைத்திலும் பெண்ணே பலியாகிறாள். அரசன் முதல் ஆண்டி வரை அவர்களின் வன்மத்தை காட்ட பெண்ணுடலே அரங்கமாகிறது. அந்த அரங்கத்தில் இந்த சமூகம் பேய்யாட்டம் ஆடுகிறது. எங்கும் எதிலும் எளிதாக எளனமாக, போக பொருளாக, பலியாடக சபிக்கபடுகிறாள் பெண் .
நாராயணன் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என பிரகலாதன் சொன்னது நம் அனைவரும் அறிந்ததே!. அதே போல சமூகத்தின் உணர்ச்சி கொந்தளிப்புக்கு பெண் இனமே பலி. அதுமட்டுமல்ல பெண்களின் சாதனைகள், ஆண்களின் வரலாற்று ஆற்றில் அடித்து சென்றுவிடுகின்றன. ஆறுகளை தூர்வாரினால் நீரோட்டம் பாயும்.
ஆனால் பெண் சமூகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. பெண் ஆண் வேடம் தரித்து அரசராக பவணி வந்ததையும் வரலாறுகள் மின்னல் போல் சில இடங்களில் சொல்லி செல்கிறது. விதிவிலக்குகள் அனைத்திலும் உண்டு. இந்த நிகழ்வுகளில் விதிவிலக்குகள் சொச்சமே!
இந்த நாவலில் அல்லி என்பவள் யார்? அவளுக்கு யாருடன் திருமணம் நிச்சியக்கப்பட்டது. அவளின் திருமண நிகழவில் எனன நடந்தது? ஆனைமாடனுக்கும் அல்லிக்கும் உள்ள தொடர்பு என்ன? திருவாங்கூர் சட்டங்கள் என்ன? மெக்காலாவிற்கும் வேலுத்தம்பிக்கும் உள்ள உறவு என்ன? திருவாங்கூர் கஜானா நிரப்ப என்ன வரிகள் எல்லாம் விதிக்கப்பட்டது? பிரெஞ்சு படைகளுக்கும் வேலுத்தம்பிக்கும் உள்ள தொடர்புகள் என்ன? ஆனைமாடன் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றானா? என்ற பல கேள்விகளுக்கு விடையாக இந்த புத்தக வாசிப்பு அமைகிறது. வாசிக்கும் வாசகர்கள் பெண்ணின் வலியையும் வலிமையையும் நிச்சயம் அறிய உதவும் என்பதில் ஐய்யமில்லை.
ஒரு பெண் முடிவு எடுத்துவிட்டால் அதை அவள் அடைந்தே திருவாள் என்பதற்கு அல்லி ஒரு எடுத்துக்காட்டு. புத்தகத்தின் அட்டைப்படம் வண்ணம் அருமை.
எழுத்தாளர் கு. கு. விக்டர் பிரின்ஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
நூலின் விவரங்கள்:
புத்தகம் : அல்லி முலை ஆனை மாடன் (Alli Mulai Aanai Maadan)
எழுத்தாளர்: கு.கு.விக்டர் பிரின்ஸ்
பதிப்பகம்: சால்ட் பதிப்பகம் (Salt publications)
தொடர்புக்கு : 9551065500 : 9791916936.
எழுதியவர்:
✍🏻 – திருமதி சாந்தி சரவணன்
சென்னை 40
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
