எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..? என்ற நூலினை ஜி.செல்வா எழுதியுள்ளார். இந்நூல் களத்தில் இறங்கி போராடும் மனிதர்கள் சொல்லிக்கொடுத்த அனுபவத்தை வைத்து முப்பது கட்டுரைகளாக உள்ளன.
“படிப்பதற்கு போராடு, போராடுவதற்காகப் படி!” என்று இந்திய மாணவர் சங்கத்தின் வார்த்தைகளோடு தெருவில் இறங்கி போராடும் மக்களின் வாழ்க்கையின் மாற்றங்கள் குறித்து பேசும் புத்தகமாக இருக்கின்றன.
*வாழ்விட உரிமை*
இந்தியா என்பது கிராமங்கள் நிறைந்து காணப்படுகிறது. நகரமயமாதலின் விளைவு கிராமங்களில் இருந்து மக்கள் நகரத்தை நோக்கி அன்றாட பிழைப்புக்காகச் செல்ல வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்படுகிறது. அங்கு செல்லும் மக்களின் வாழ்க்கையின் குடியிருப்பு என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சார்ந்த மனிதர்கள் தனக்கு கிடைத்த இடங்களில் குடிசைகளிலும், தெருக்களிலும், கூவத்தின் அருகிலும் வாழ்க்கை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். சென்னையின் என்னும் மாநகரத்தில் உழைக்கும் வர்க்கமாக திகழும் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த பாதிப்புகளை இந்நூலில் குறிப்பிடுகிறார்.
“தோழரே பாத்தீங்களா…கொரோனால வந்த வேலைய. இந்த பிளாக்லதான் இப்ப பெருக்குற வேலை. நான் குடியிருக்க வேண்டிய வீட்டில பெருக்குற வேலை. இதெல்லாம் எப்போதான் மாறுமோ.. மறக்காம போராட்டத் தேதிய முன்னாடியே சொல்லிடுங்க. அதிகாரிங்களை நாலு வார்த்தை கேட்கணும். எல்லாத்து நாங்கதான் கஷ்டப்படணுமா?? என்ற வலிகள் நிறைந்த மனிதர்களின் வாழ்க்கையின் சந்திக்கும் பிரச்சனைகள் கூறுகிறது.
1972ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் ” தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” இப்போது ” தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கண்ட கனவு என்ற கட்டுரையில் குடிசையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றம் எப்படி கணக்கிடப்பட்டன. ஆனால் தற்போது தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் மோசமான செயல்பாடுகள், அதில் மக்கள் போராடியதும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு சென்று தீர்வாக உருவாகின என்பதை மிகவும் தெளிவாக இந்நூலில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். பொதுநல வழக்குகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் இருந்து அகற்றுகிறது. மக்களால் அரசாங்கமும், அமைப்புகளும் இயங்குகிறது. சில நேரங்களில் அரசுகள் செவிசாய்த்தாலும், அதிகார அமைப்புகளில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை பேசும் கட்டுரையாக வாழ்விட உரிமையில் இருக்கிறது.
*தொழிலாளர் உரிமை*
“எங்களது வார்த்தைகளைவிட எங்களது மெளனம் அதிகம் பேசும் காலம் கண்டிப்பாக வரும்” சிகாகோ நகரில் ஆகஸ்ட் ஸ்பைஸ் வார்த்தைகளோடு எட்டு மணி நேர வேலை நாளுக்காக போராடியவர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு சொன்ன வார்த்தையை இந்நூல் விளக்குகிறது. அதன் பிறகு 1923ஆம் ஆண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலன் முதன் முதலாக மெரினா கடற்கரையில் உழைக்கும் மக்களின் உரிமை போராட்டமாக இந்தியாவில் தொடங்கியது.
முதலாளித்துவ சமூக அமைப்பு என்பது தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி கொண்டு வளர்ச்சி அடைய முயற்சிக்கும். இதற்கு மாற்று என்பது பொதுவுடைமை சமூகத்தை உருவாக்குவது தான் என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்நூலில் எழுத்தாளர் தொழிலாளிகள் பெற்ற உரிமைகள், வேலை நேரம் அதிகரிப்பு, தமிழ்நாடு அரசின் நிலைபாடுகள் குறித்து எழுதிருக்கிறார். மேதினம் உருவான வரலாறுகளையும், தொழிலாளிக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவரும் நான்கு சட்டத்தொகுப்பின் பாதிப்புகள் குறித்தும் இந்நூலில் உள்ளது.
*மனித உரிமைகள்*
மனித உரிமைகள் என்ற தலைப்பில் பதினொன்று கட்டுரையில் இந்நூல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் மனிதர்களின் மீதான அதிகார வர்க்கம் எந்த அளவுக்கு ஊடுருவி சென்றுள்ளது. சென்னையின் என்னும் அழகான நகரத்தில் மனித உயிர்களுக்கு என்ன மதிப்பு அளிக்கப்படுகிறது என்று பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே என்று நினைக்க தோன்றுகிறது. தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றும் அதை வாங்காமல் சிறைப்படுத்திய அதிகாரக வர்க்கத்தின் ஆணவங்கள், தனிமனிதரின் மாண்பைக் காக்காமல் செல்கிறது.
சென்னையில் நடந்த லாக்கப் படுக்கொலைகளும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் ” நாங்க என்ன அரசாங்கத்த எதிர்த்தா போராடினோம். அதுக்காக என் பிள்ளை மேல் துப்பாக்கி குண்டு ஏன் பாய்ந்தது” என்ற கேள்வியோடு நூறு நாட்கள் கண்டுகொள்ளாத அன்றைய அரசின் தவறுகள் குறித்து தெளிவாக இந்நூல் எடுத்து சொல்கிறது. 1989ல் அனைத்து சாதியிரையும் அர்ச்சகராக்கக் கோரி தந்தை பெரியார் போராட்ட அறிவிப்பு கொடுத்தார், ஆனால் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது. கேரளா வின் இடதுசாரிகள் அரசாங்கம் எப்படி முன் எடுத்து மக்களிடம் சென்றது என்று இந்நூல் விளக்குகிறது. அயோத்திலிருந்து திருப்பரம்குன்றம் வரை சதித்திட்டத்தின் பின்னணி என்ன நினைக்கிறது. மதத்தின் அடிப்படையில் மனித மனங்கள் பிளவு உருவாமல் இருக்க தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் இருக்கிறது.
தெருவோர வியாபாரிகள் நலன்களுக்காக “வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2024” கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி மட்டும் ஏன் அதை பின்பற்றவில்லை என்று நிறையக் கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஆக்கிரமிப்பு” என்றால் என்ன?.. அதை அதிகார வர்க்கத்தில் இருந்து அத்துமீறலான இரவுகள் குறித்து கட்டுரையில் தெளிவாகப் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களோடு தெருவோரம் நிற்கும் கடைகள் சட்ட விரோதம் அல்ல என்று புத்தகத்தில் உள்ளது. தெருவோர வியாபாரம் அடிப்படை உரிமை என்று நீதிபதியின் கருத்துகளோடு நின்று உரையாடிக் கொண்டு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
காசாவின் இஸ்ரேல் நடந்திய இனப்படுகொலைகளில் இரண்டு ஆண்டுகளில் 66000 உயிர்கள் மண்ணில் புதைந்ததாகவும், பாலஸ்தீனம் என்ற தேசத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை அழிந்து போனதாகவும் இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு பாலஸ்தீனத்தில் இருந்து எப்படி இஸ்ரேலுக்கு மாறியது என்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது இந்தியாவின் நிலைப்பாடு மோசமானதாக இருந்தாகவும் இந்நூலில் கூறுகிறது. “சுகந்திர பாலஸ்தீனம் அமையட்டும்” என்ற கோரிக்கை இன்னும் அழுத்தமாக அமையட்டும் என்ற கோரிக்கையை இந்நூல் முன் வைக்கிறது.
*கொரானவும் சமூகமும்*
கொரான காலத்தில் மனிதர்களே மனிதர்களைப் பார்த்து பயந்து ஓடும் நிலைமைக்கு கொண்டு சென்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே வீட்டில் ஐந்துபேர் இறந்தது எப்படி?.. அவர்களுக்கு அரசின் நிவாரணம் ஏன் கிடைக்கவில்லை. கொரான காலத்தில் ஆன்லைன் படிப்பு அதிகமானதும், கிராமப்புறத்தில் இணையவழி சேவை இல்லாமல் இருக்கும்போது கல்வி மட்டும் எப்படி சாத்தியமாகும் என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. கொரானா தொற்று, ஒரு அரசியல் பொருளாதாரமாக உலக அளவில் மாறியது குறித்து இந்நூலில் மூன்று கட்டுரைகளாக இருக்கிறது.
*களத்தில் கம்யூனிஸ்டுகள்*
அம்பேத்கரின் மஹத் சத்தியாகிரகப் போராட்டம் மிகுந்த முக்கியதுவம் குறித்து புத்தகத்தில் எழுதியுள்ளார். மனுஸ்மிருதி எதிர்ப்பு, நாசிக் கோயில் நுழைவுப் போராட்டம், கோத்தி முறை ஒழிக்க போராட்டம், வதந்தார் ஒழிப்பு முறை, தொழிற்தகராறு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கார் களத்தில் எப்படி மக்களோடு போராடினார்.
தந்தை பெரியார் கம்யூனிஸ்டுகளோடு நெருக்கமான பயணித்தார். அதில் பி.ராமமூர்த்தி, பாப்பா உமாநாத், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற தலைவர்களோடு நடந்த உரையாடல்கள் பெரியாரியம், அம்பேத்கரியம் மற்றும் மார்க்சியம் உள்ள முரண்பாடுகளில் சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் எப்படி சேர்ந்து பயணித்ததாக இருக்கிறது.
விடுதலைப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணி தலைவருமான தோழர்.சங்கரய்யா மற்றும் தோழர்.சீத்தாராம் யெச்சூரி, தோழர்.அய்ஜாஸ் அகமது, தோழர்.என். இராமகிருஷ்ணன், தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தனின் கடைசி நிமிடங்கள் மற்றும் வாழ்க்கை பயணத்தில் எழுத்தாளர் பெற்ற அனுபவங்களை எழுதியுள்ளார். எழுத்தாயுதம் எந்திய இடதுசாரிகள் குறித்த எளிமையாகவும், மிகுந்த கருத்துக்களோடும் கட்டுரைகள் இருக்கிறது. களத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களோடு மக்களாக நின்று போராடி அதற்கான வெற்றியும் அடைந்ததாக வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தப் புத்தகம் முழுவதும் தீக்கதீர், இந்து தமிழ் திசை, விகடனில் எழுதிய கட்டுரைகள் தொகுத்து புத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. எளியவர்களோடு யார் முன் நிற்கிறார்கள். களத்தில் இடதுசாரிகளின் பங்கு என்ன இருக்கிறது. எழுத்துகளின் மூலம் மாற்றங்களை எப்படி உருவாக்கலாம் என்று எழுத்தாளர் கூறியதாக நான் பார்க்கிறேன். சமூகம் சார்ந்த விசாலப் பார்வையும், மானுடத்தின் மீதான நம்பிக்கையை பெற்ற கம்யூனிஸ்டாக தோழர்.ஜி.செல்வா இயங்கி வருகிறார் என்பதை தெளிவாக தெரிகிறது.
செவ்வணக்கம்!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா? |
| ஆசிரியர்: | ஜி.செல்வா |
| வெளியீடு: | |
| விலை: | ₹.190 |
| அறிமுகம் எழுதியவர்: | சு.வினோத்குமார் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

