பேரா.சோ.மோகனா எழுதிய "பெண் மருத்துவர் - எமிலியா ஹிலாரியா (Aemilia Hilaria) (கி.பி. 300 – 363)" தமிழ் கட்டுரை | Tamil History Article | www.bookday.in

பெண் மருத்துவர் – எமிலியா ஹிலாரியா (Aemilia Hilaria) (கி.பி. 300 – 363) | பேரா.சோ.மோகனா

பெண் மருத்துவர் – எமிலியா ஹிலாரியா (Aemilia Hilaria) (கி.பி. 300 – 363)

கால நிலையும், அரசும்  

வலிமையான ரோமானியப் பேரரசு ரோம் நகரை ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலம் . ரோமானியப் பேரரசு என்பது கி.மு. 27 முதல் கி.பி. 1453 வரை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியப் பகுதிகளில் உட்பட பரந்து விரிந்த உலகின் மிக வலிமையான பழங்காலப் பேரரசுகளில் ஒன்றாகும். மனித வரலாற்றிலும் பூமியின் வரலாற்றிலும் கி.பி. 300 – 400 , (4-ஆம் நூற்றாண்டு) மிகவும்  முக்கியதத்துவம் பெற்றது. அப்போது காலநிலை மாற்றத்தால், இளம் பனிக்காலம் (Late Antique Little Ice Age ) தொடங்கி இருந்தது. புவியின், வட அரைக்கோளத்தில் உலகளாவிய வெப்பநிலை மெதுவாகக் குறையத் தொடங்கியது. ஐரோப்பாவில் குளிர்காலம் வழக்கத்தை விட நீடித்தும், கோடைகாலம் குளிர்ந்தும் காணப்பட்டது.

The Roman Empire

உணவும் பழக்கமும்

ஐரோப்பாவின்  பல பகுதிகளில் மனித நடமாட்டம், விவசாயம் குறைந்ததால், அடர்ந்த காடுகள் மீண்டும் பெருகின. ஐரோப்பாவில் பார்லி, ஓட்ஸ், திராட்சையும் முக்கியமாக விவசாயம் செய்யப்பட்டன. பார்லி கஞ்சி, ரொட்டி, ஆலிவ் எண்ணெய், ஒயின்  ஆகியவை முதன்மை உணவாக இருந்தன. சாதாரண மக்கள் காய்கறிகளையும், பணக்காரர்கள் பன்றி,ஆட்டு இறைச்சியையும் உண்டனர். குளிர்காலத்திற்காக இறைச்சியை உப்பிட்டுப் பாதுகாக்கும் முறையும், தானியங்களை நிலத்தடி அறைகளில் சேமிக்கும் முறையும் பரவலாக இருந்தது.

நமது நாயகி எமிலியா கம்பீரமாக

மனிதகுல வரலாற்றின் நீண்டகாலப் பதிவுகளில்,சில பெயர்கள் மட்டுமே காலத்தின் ஓட்டத்தில் அழியாமல் நிற்கின்றன. அரசர்களின் அரியணைகள் அழிந்து  மண்ணாகிவிட்டன போர்க்களங்களில் வெற்றி நாட்டிய வீரர்களின் பெயர்கள்கூட காலத்தின் காற்றில் கரைந்துவிட்டன. ஆனால் மனித நேயத்தால் ஒளிர்ந்த சில உயிர்கள் மட்டும் வரலாற்றின் இருண்ட வழித்தடங்களிலும் மங்காமல் பிரகாசிக்கின்றன. அத்தகைய ஒருவர்தான் நம் நாயகி எமிலியா ஹிலாரியா. இவர் ஒரு மருத்துவர் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகிறன.

எமிலியா ஹிலாரியா யார்.?

எமிலியா ஹிலாரியா (c. 300– c. 363) என்பவர் ஒரு காலோ-ரோமன் (Gallo-Roman) மருத்துவர். அவர் மருத்துவத்தில் பயிற்சி செய்தார்.  மேலும் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது முகத்தோற்றத்தில் எப்போதும். ஒரு குழந்தமை கலந்த மகிழ்ச்சி நிலவியதன் காரணமாக அவர் “ஹிலேரியா” என்றும் அழைக்கப்பட்டார்.

மருத்துவர்…!

இன்று மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட்டு அணிந்து பணியாற்றும் பெண் மருத்துவர்களைக் இயல்பாகக் காண்கிறோம். மருத்துவக் கல்லூரிகளின் வகுப்பறைகளில் பெண்கள் நிறைந்துள்ளனர்.. ஆனால் இன்றிலிருந்து சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண் மருத்துவத்தை வாழ்க்கைப் பணியாகத் தேர்ந்தெடுத்திருந்தால் அது எவ்வளவு பெரிய சமூகச் சவாலாக இருந்திருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.அந்தச் சவால்களை எல்லாம் அஞ்சாமல் சந்தித்து,  அறிவின் பாதையில் நடந்தவர் எமிலியா ஹிலாரியா.

PDF) 2016. “Roman women in the urban economy: occupations, social  connections, and gendered exclusions” in Women in Antiquity: Real Women  Across the Ancient World. Edited by J. Turfa and S. Budin. London:

பெண் மருத்துவர் எமிலியா ஹிலாரியா, பற்றி ..

எமிலியா ஹிலாரியா, என்ற பெண் மருத்துவர், கவிஞர், மற்றும் சொல்லாட்சிக் கலைஞரான டெசிமஸ் மேக்னஸ் ஆசோனியஸ் (Decimus Magnus Ausonius) என்பவரின்  தாய்வழி சித்தி ஆவார். ஆசோனியஸ் காலோ-ரோமன்  பகுதியின் செனட்டர் ஆக   இருந்துள்ளார். ஆசோனியஸ், பேரரசர் கிரேடியனுக்கு ஆசிரியராகவும் இருந்தார். எமிலியா ஹிலாரியாவின், தங்கை மகன் ஆசோனியஸ் சுமார் கி.பி 310 – 395 வரை வாழ்ந்தவர். எமிலியா, கௌல் (Gaul) ஊரின், மொசெல்லே (Moselle)  ஆற்றின் அருகே வாழ்ந்த ஒரு மருத்துவர். ஆசோனியஸ், எமிலியா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளைத் தொடராக எழுதினார். அவர் எமிலியா ஹிலாரியா,அவரது குடும்பத்தைப் பற்றி இன்று நமக்குத் தெரிந்தவை  அனைத்தும், ஆசோனியல் எழுதிய பேரன்டாலியா (Parentalia) நூலிலிருந்தே.அவரது கூற்றுப்படி, நமக்குத் தெரிய வரும் தகவல்கள் “எமிலியா ஓர்”அர்ப்பணிப்புள்ளகன்னி”.எமிலியா ஹிலாரியா திருமணத்தை, தொழிலுக்கு ஒரு தடையாக நினைத்து நிராகரித்தார், மேலும் “ஒரு ஆண் மகனைப் போலவே உடலை  குணப்படுத்தும் மருத்துவக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்

ஹிலாரியா பிறப்பு

கி.பி. நான்காம் நூற்றாண்டில், ஏறத்தாழ கி.பி. 300-ஆம் ஆண்டு,ஒரு நாளின் விடியற்காலை நேரத்தில், , ரோமானியப் பேரரசின் பரந்த நிலப்பரப்பில், ” கௌல்” என்ற ஊரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து, தனது காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி, மருத்துவ உலகில் ஓர் அடையாளமாக மாறும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

Fichier:Trotula (BM 1896,0511.244).jpg — Wikipédia

“கௌல்” என்ற ஊர் இப்போது ,பிரான்சின் மொசெல்லே  பகுதியில் உள்ளது எமிலியாவின் தந்தையின் பெயர்: கேசிலியஸ் அக்ரிசியஸ் அர்போரியஸ் (Caecilius Agricius Arborius). அவரது அன்னையின் பெயர்: எமிலியா கொரிந்தியா மௌரா (Aemilia Corinthia Maura) என்பதாகும். அவரது தந்தையின் குடும்பம், ஓரளவு பூர்வீக செல்டிக் ஏடுவான் பிரபுத்துவத்தின் வம்சாவளியைச் சேர்ந்தது, ஒருவேளை 260 ஆம் ஆண்டில் அவர்கள் மத்திய கௌலில் இருந்து அங்கு குடியேறியிருக்கலாம். ஆனால் அவரது தாயார் உள்ளூர் முனிசிபல் பிரபுத்துவத்திலிருந்து வந்தவர், இருப்பினும் அவர்கள் ஏழைகள் என்று கவிஞர் ஆசோனியஸ் குறிப்பிடுகிறார்.

குழந்தையின் பெயர் எமிலியா.

வரலாற்றில் அவரை,” எமிலியா ஹிலாரியா” என்று குறிப்பிடுகின்றனர். “ஹிலாரியா” என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். சிலரது முகத்தில் புன்னகை பூக்கும்; சிலரது மனதில் புன்னகை வாழும். எமிலியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது முகத்தில், எப்போதும் குழந்தைத்தனமான சிரிப்பு நிரந்தரமாக  இருந்தது என  பின்னாளின் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

எமிலியா ஹிலாரியாவின் குணம்

எமிலியா ஹிலாரியா சிறுமியாக இருந்தபோது ஓர் ஆண் குழந்தை போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு “ஹிலாரியஸ்” என்ற ஆண் புனைப்பெயர் அவருக்கு வழங்கப்பட்டது என்றும் கூட தகவல்கள் கிடைக்கின்றன. அவரது தங்கைமகன், ஆசோனியஸ், எமிலியா ஹிலாரியா பற்றிக் குறிப்பிடுவதாவது: “எமிலியா ஹிலாரியா தனது குழந்தைப் பருவத்தில் அதிக ஆண்மை தன்மையுடன் தொடர்ந்து நடந்துகொண்டார்., வயது முதிர்ந்த வயதிலும் கூட, குறைவான பெண்தன்மை  உடையணிந்ததாகவும் தெரிவித்தார்.அதனாலும் கூட, இந்த பழக்கத்தினால்,எமிலியா ஹிலாரியா திருமணமாகாமல் இருந்திருக்கலாம் என்று கருதினார்.மேலும்அப்போதைய  காலகட்டத்தில், கிறித்தவ பெண்கள் தங்கள் பெண் தோற்றத்தை மறைக்க ஆண் தோற்ற உடை மதகுருமார்களால் ஊக்குவிக்கப்பட்டது என்பதும் கூட குறிப்பிடத்தக்க விஷயமே.

L'accès des femmes aux livres et aux bibliothèques familiales en Gaule  romaine

எமிலியா கிறித்துவரா?

எமிலியா ஹிலாரியா ஒரு கிறித்தவரா என்பதும் கூட சரியாகத் தெரியவில்லை. “அன்புள்ள கன்னித்தன்மையின் காதல்” (devotae virginitatis amor) என்ற சொற்றொடர் இதைக் குறிக்கிறது. ஆசோனியஸின் மொழி, உண்மையைவிட கவிதை உரிமம் பற்றி நாம் பேசலாம். ஆயினும்,எமிலியாவின், ஒரே ஆதாரமாக ஆசோனியஸ் இருப்பதால், ஆசோனியஸின் வார்த்தையை ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை, எனவே எமிலியா ஹிலாரியா ஒரு பாரம்பரிய ரோமானிய பெண் உருவத்தையும், பாத்திரத்தையும் நிராகரித்த ஒரு பெண்ணாக நம்மிடம் வருகிறார். ஆசோனியஸின் சொற்றொடரில் எமிலியா ஹிலாரியாஇவ்வாறு இருந்தார் எனக் குறிப்பிடுவது  கவிதையாக எழுதப்பட்டதாகவும்  இருக்கலாம்.

கௌலின் பசுமையும், எமியாவின்  குழந்தைப்பருவ கனவுகளும்

எமிலியா காலத்தில் “கௌல்”என்ற ஊர் ரோமானியப் பேரரசின் முக்கியமான செழிப்பான இடமாகும்.அப்போது அது செழிப்பான நாகரிகம் மிகுந்தது. செல்டிக் மரபுகளும் ரோமானியக் கலாச்சாரமும் ஒன்றோடொன்று கலந்திருந்தன.மொசெல்லே ஆற்றங்கரையின் காலை பனித்துளிகள், திராட்சைத் தோட்டங்களின் மரகதப் பச்சை இலைகளில் தாலாட்டியது., தொலைவில் கிராமத்தின்  மணி ஓசை ஒலித்தது. ,இவைகளோடு, எமிலியாவின் குழந்தைப் பருவம் மலர்ந்தது. வரலாறு அவரது, குழந்தைப் பருவத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை. ஆனால் எமிலியா சாதனையின் பின்னாலும் ஆர்வம் நிறைந்த ஒரு சிறுமியாக இருநதிருகிறார்

எமிலியாவின் உடன் பிறப்புகள்

எமிலியாவுக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவரின் பெயர் எமிலியஸ் மேக்னஸ் ஆர்போரியஸ். அவர் பேரரசர் கான்ஸ்டான்டியஸின் மகனுக்கு ஆசிரியரானார். மேலும் எமிலியாவுக்கு  இரண்டு சகோதரிகள் இருந்தனர். ஒருவர் குழந்தைப் பருவத்தில் இறந்த எமிலியா ட்ரைடியா மற்றும் இன்னொருவர் ஆசோனியஸின் தாய் அமிலியா அயோனியா.

தாயின் பெயரைத் தாங்கிய அசாதாரண குடும்பம்

எமிலியா மற்றும் அவரது உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் தாயின் குடும்பப் பெயரை, காலத்தின் வழக்கமான நடைமுறைக்கு மாறாக எடுத்துக் கொண்டனர், இது அந்த நேரத்தில் அசாதாரணமானது என்று வரலாற்றாசிரியர் ஹகித் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

மரபுகளுக்கு எதிராக நடந்த பாதங்கள்

எமிலியா பற்றிய குறிப்புக்களை எழுதிய ஆசோனியஸ், அவரை மற்ற பெண்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். அவரது நடை,உடை வாழ்க்கை முறை, அக்கால பெண்களின் வழக்கத்துடன் ஒத்துப் போகவில்லை என்று கூறப்படுகிறது. இதை, தன்னம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் ஒரு சமூக அமைப்பில்,  அனைவரும் ஒரே மாதிரியாக உருவாக வேண்டியதில்லை. சிலர் அதனை  உடைத்துத் தங்களுக்கென ஒரு வார்ப்பை உருவாக்குகின்றனர்.  எமிலியா அவர்களில் ஒருவர்.

Women's medicine in antiquity - Wikipedia

திருமணத்தை விடத் தேர்ந்தெடுத்த பணி மருத்துவம்

பெண்களின் வாழ்க்கைப் பாதையை சமூகம் தீர்மானித்த காலம் அது. ஆனால் எமிலியா தனது வாழ்க்கையைத் தானே தீர்மானித்தார்.அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அது தனிமையை த் தேர்ந்தெடுத்த வாழ்க்கையல்ல.அது அர்ப்பணிப்பைத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. சிலர் குடும்பத்திற்காக வாழ்கிறார்கள்.சிலர் சமுதாயத்திற்காக வாழ்கிறார்கள்.எமிலியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருந்தார்..நோயாளிகளின் நலனில் அவர் கண்ட மகிழ்ச்சி, வேறு எந்த வகை மகிழ்ச்சிக்கும் இணையாக இல்லைஎன்பதே

எமிலியா ஹிலாரியா – மறைவு

கில்லியன் கிளார்க் என்ற வரலாற்றாசிரியர்,  எமிலியா ஹிலாரியா பற்றிக் குறிப்பிடுவதாவது “எமிலியா ஹிலாரியா மருத்துவத்தை “முழுநேர அர்ப்பணிப்பாக” பின்பற்றினார் என்று பரிந்துரைத்தார்.

நேர்மையும் திறமையும் ஒருங்கே கொண்ட மருத்துவர் என்றும் அவரை ஆசோனியஸ் பாராட்டுகிறார். மருத்துவராயிருந்த தம் சகோதரரின் கற்றலுக்கும் அவர் துணைநின்றார். சகோதரர்மீது அன்னையைப் போல் அன்பு காட்டினார்; எமிலியா ஹிலாரியாவின் தனது 63ஆம் வயதில், கி.பி. 363-இல் இறந்தார். (அவர் இறந்த தேதி எதுவும் பதிவிடப்படவில்லை). அதனால் அவர் இறுதிச் சடங்குகளை ஒரு மகனைப் போல் அந்தச் சகோதரரே செய்தார் என்றும் பாடல் குறிப்பிடுகிறது

ரோமானியப் பேரரசில் பெண் மருத்துவர்கள

எமிலியா ஹிலாரியா  வாழ்ந்த இந்த காலகட்டத்தில் ரோமானியப் பேரரசில் பெண் மருத்துவர்கள் வாழ்ந்தற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் மருத்துவ எழுத்துக்கள் பெண்களுக்குக் கிடைத்தன, ஆனால், கில்லியன் கிளார்க் குறிப்பிட்டுள்ளபடி, “ஆண்களின் நாகரீகத்தின்படி” என்ற சொற்றொடர்” அவர்களின்  முழுநேர அர்ப்பணிப்பை பரிந்துரைக்கலாம்.”

எமிலியாவின் மைத்துனர், ஆசோனியஸின் தந்தை ஒரு மருத்துவர் என்றும், இருவருக்கும் இடையே சில தொழில்முறை மருத்துவ தொடர்பு சாத்தியம் என்றும் பேரன்டாலியா கூறுகிறது.

பிரபலமான கலாச்சாரத்தில்

எமிலியா ஹிலாரியா ஜூடி சிகாகோவின் நிறுவல் பகுதியான தி டின்னர் பார்ட்டியில் இடம்பெற்றுள்ள ஒருபெயராக் உள்ளது. மேலும் இப்பெயர்ஹெரிடேஜ் ஃப்ளோரில் உள்ள 999 பெயர்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவர் ஹைபேஷா என்ற பெண் விஞ்ஞானியுடன் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது

காலத்தை வென்றவள் நீ

எமிலியா கி.பி. 363- ஆண் ஆண்டில்தனது 63 வது, வயதில் இந்த உலகை விட்டு மறைந்தார் .அவரது மறைவு நாள் எப்போது என்பதும் தெரியவில்லை.அவர் சிகிச்சையளித்த நோயாளிகளின் பெயர்களும் நமக்குத் தெரியாது.அவர் தொட்ட உயிர்களின் எண்ணிக்கையும் பதிவாகவில்லை.ஆனால் சில நேரங்களில் எண்ணிக்கைகளைவிட தாக்கமே முக்கியமானது. எமிலியா வாழ்ந்த வாழ்க்கை, பெண்களும் அறிவியலின் உயரங்களை அடைய முடியும் என்பதை நிரூபித்தது.அவர் வாழ்ந்த காலம் மறைந்துவிட்டது. அவர் நடந்த பாதைகள் மண்ணோடு கலந்துவிட்டன; கரைந்துவிட்டன. ஆனால் அவர் ஏற்றிய அறிவின் விளக்கு இன்னும் ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது,மருத்துவ வரலாற்றின் அமைதியான பக்கங்களைத் திறந்தால், அங்கே இன்னும் ஒரு பெயர் மிளிர்கிறது. அவர்தான்  எமிலியா ஹிலாரியா. மருத்துவத்தை ஒரு தொழிலாக அல்ல, மனிதநேயத்தின் மொழியாகக் கண்ட பெண்.

காலத்தின் கடுங்காற்றால் மறைக்க முடியாத வரலாற்றின் ஒளிக்கீற்று. எமிலியா
மருத்துவம் – ஒரு தொழில் அல்ல, ஒரு தவம்
மருத்துவம் என்பது வெறும் அறிவியல் அல்ல.
அது மனித வலியைப் புரிந்துகொள்ளும் கலை.
அது கண்ணீரின் மொழியை வாசிக்கும் திறன்

Ref:

https://www.encyclopedia.com/women/encyclopedias-almanacs-transcripts-and-maps/aemilia-hilaria-fl-350-cesources:Ausonius, Parentalia 5.
https://en.wikipedia.org/wiki/Aemilia_Hilaria
https://kids.kiddle.co/Aemilia_Hilaria
https://www.facebook.com/womansplaceuk/posts/aemilia-hilaria-c300-c363-gallo-roman-physician-named-hilarus-for-being-as-affab/1242542386099945/

📚 எழுதியவர் : 

பேரா.சோ.மோகனா - www.bookday.in

– ✍🏻 பேரா.சோ.மோகனா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *