காந்தி 150: காந்தி தமிழ் நூல்கள்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு இது. காந்தி தன் வாழ்வு முழுவதும் பல லட்சம் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார். பல புத்தகங்களை எழுதியதுடன் இந்தி, குஜராத்தி, ஆங்கில மொழிகளில் இதழ்களையும் அவர் நடத்தி உள்ளார். காந்தி எழுதிய பல நூல்களும் காந்தி பற்றி எழுதப்பட்ட நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் நேரடியாகவும் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கிய காந்தி நூல்களின் தொகுப்பு:

காந்தி எழுதிய நூல்கள்

> சத்திய சோதனை – தாய்மொழியான குஜராத்தியில் காந்தி எழுதிய சுயசரிதை. ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

> இந்திய சுயராஜ்யம் – குஜராத்தியில் காந்தி எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலின் தமிழ் வடிவம். சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடு.

காந்தி பற்றிய நூல்கள்

> காந்தி வாழ்க்கை – அமெரிக்க இதழாளர் லூயி ஃபிஷர் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான The Life of Mahatma Gandhi-ன் தமிழாக்கம். தமிழில்- தி.ஜ.ரங்கநாதன், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.

> இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு – வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா (இரண்டு பாகங்கள்). தமிழில் – ஆர்.பி.சாரதி, கிழக்குப் பதிப்பகம் வெளியீடு.

> காந்திஜியின் இறுதி 200 நாட்கள்- ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராமமூர்த்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தமிழாக்கம். தமிழில்- கி.இலக்குவன். பாரதி புத்தகாலயம் வெளியீடு.

> காந்தியை அறிதல் – வரலாற்று அறிஞர் தரம்பால் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழில்: ஜனகப்ரியா, காலச்சுவடு வெளியீடு.

> உன்னத நோன்பு – பியாரிலால் எழுதிய ‘The Epic Fast’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். நவஜீவன் டிரஸ்ட், காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடு.

> மகாத்மா காந்தி – அமெரிக்க நாவலாசிரியர் வின்சென்ட் ஷீன் எழுதிய ’Mahatma Gandhi: A Great Life in Brief’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் தமிழ் வடிவம். வ.உ.சி. நூலகம் வெளியீடு.

> மகாத்மாவும் அவரது இசமும் – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.எம்.எஸ் எழுதியது. பாரதி புத்தகாலயம் வெளியீடு.

> தீப்பற்றிய பாதங்கள் – கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர்.நாகராஜ் எழுதிய தலித் இயக்கம், கலாச்சார நினைவுகள், அரசியல் வன்முறை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு, தமிழில்- ராமாநுஜம். புலம் வெளியீடு.

> காந்தியும் அவரது சீடர்களும் – ஜெயந்த் பாண்ட்யா. தமிழில் – சு.வேங்கட்ராமன். நேஷனல் புக் டிரஸ்ட், வெளியீடு

> காந்தியின் ஆடை தந்த விடுதலை – பீட்டர் கான்ஸ்லாவ்ஸ். தமிழில்- சாருகேசி. விகடன் வெளியீடு.

நேரடித் தமிழ் நூல்கள்

> தமிழ்நாட்டில் காந்தி – அ.ராமசாமி; விகடன் வெளியீடு.

> தமிழ்நாட்டில் காந்தி – தி.செ.செள.ராஜtன்; சந்தியா பதிப்பகம் வெளியீடு.

> காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் – அ.மார்க்ஸ்; எதிர் வெளியீடு.

> காந்தி அம்பேத்கர்- மோதலும் சமரசமும் – அருணன்; பாரதி புத்தகாலயம் வெளியீடு.

> காந்தியைக் கடந்த காந்தியம் – பிரேம்; காலச்சுவடு வெளியீடு.

> இன்றைய காந்தி – ஜெயமோகன்; தமிழினி வெளியீடு.

தண்டி யாத்திரை – ஏ.கோபண்ணா; நவ இந்தியா பதிப்பகம் வெளியீடு.

நன்றி – தி இந்து