காந்தி ஜெயந்தி கவிதை - காந்திக்கணக்கு | அ.சீனிவாசன் | Tamil Kavithaigal (Tamil Poetry) | Gandhi Jayanti Poetry | www.bookday.in

காந்தி ஜெயந்தி கவிதை – காந்திக்கணக்கு | அ.சீனிவாசன்

காந்தி ஜெயந்தி கவிதை – காந்திக்கணக்கு 

பிறக்கும் வரை
அவரும் காந்தி இல்லை.

பிறந்த பின்னும்
பெயரில் மட்டுமே காந்தி.

வாழ்ந்துதான்
மகாத்மா;

வாழவைத்துதான்
தேசப்பிதா.

தானாகப்
பெயர் சூட்டிக்கொள்வதாலும்
போதாது;

பிறரிடம்
பட்டம் வாங்கிக்கொள்வதாலும்
போதாது.

அவர் போல
நடிப்பதும் போதாது—
நடிக்காததுபோல்
நடிப்பதும் போதாது.

அவர் போல
இருப்பதும் போதாது;

அவராக
மாறுவதும் போதாது.

அவரைப் போல
புகழ் பெறுவதும் போதாது;
புகழை
வாங்கிக்கொள்வதும் போதாது.

“மகாத்மா”
காப்புரிமை
எந்த வாரிசுக்கும்
கொடுக்கப்படவில்லை.

அவரை மிஞ்சுவதற்கும்
எந்தத் தடையும்
விதிக்கப்படவில்லை.

காந்தி நோட்டுகள்
முடக்கப்படலாம்.

வங்கிகள்
மூடப்படலாம்.

காந்தியும்
முடிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால்—

காந்திக்கணக்கு
முடியாது.

காந்தியும்
இந்த தேசமும்
வேறுவேறல்ல;

எல்லோரையும்
எளிதில் நம்பி
ஏமாறுவதில்!

தேசப்பிதா
என்று
மக்கள் மனதில்
சுயமாய்
எழுதிக்கொண்ட பெயர்
அது.

இந்தியா
பெயரிலான நாடல்ல;

இந்தியர்களை
அனாதையாய்
யாரும் விட்டுச்
செல்லவில்லை.

அவராகப்
பிறக்க முடியாது.

ஆனால்—

அவரைவிட
மேலாக வாழவும்,
இந்த நாட்டை
மேலாக வாழவைக்கவும்
எந்தத் தடையும்
அவர் விட்டுச் செல்லவில்லை.

யாரும்
தடையும்
போடவில்லை.

காந்திக்கணக்கு
இன்னும் முடியவில்லை!

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *