பொன்விழா காணும் காந்திகிராம் பல்கலைக்கழகம்! - இல. சுருளிவேல் | Gandhigram University celebrates its golden jubilee | www.bookday.in

பொன்விழா காணும் காந்திகிராம் பல்கலைக்கழகம்! – இல. சுருளிவேல்

பொன்விழா காணும் காந்திகிராம் பல்கலைக்கழகம்!

– இல. சுருளிவேல்

 “கிராமம் உயர நாடு உயரும்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural Institute) உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகத்திற்கு முன்னால் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். நீதியரசர் பிரகலாத் பாலச்சார்யா கஜேந்திரகட்கர், முன்னாள் துணை குடியரசுத் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன், கிரசன் காந்த், பைரோன்சிங் சஹாவத், முகமது ஹமித் அன்சாரி உட்பட முக்கிய தலைவர்களும் இப்பல்கலைக்கழகத்திற்கு வேந்தர்களாக பெருமை சேர்த்துத் தந்துள்ளனர். தற்போது கே.எம்.அண்ணாமலை வேந்தராகவும், என்.பஞ்சநதம் துணைவேந்தராகவும் இருக்கின்றனர்.

பொன்விழா காணும் காந்திகிராம் பல்கலைக்கழகம் : 

02.02.1946 நாளன்று மகாத்மா காந்தி தொடர்வண்டியில் மதுரை செல்லும் வழியில் சின்னாளப்பட்டி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு நின்று பேசிவிட்டு சென்றதாக ஒரு வரலாறு உண்டு. டாக்டர் ஜி.இராமச்சந்திரன் மற்றும் டாக்டர் சௌந்தரம் இராமச்சந்திரன் ஆகிய தியாகிகளால் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதாகும். கிராம முன்னேற்றத்துக்கான ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் வளர்ந்தால் நாடு வளரும். கிராமப்புறம் மேம்பாடு, அனைவருக்குமான வளர்ச்சி, சுயசார்பு, நிலைத்த வளர்ச்சிக்கு அடிப்படை போன்ற தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் உருவானது.

டாக்டர் ஜி. இராமச்சந்திரன் மற்றும் டாக்டர் சௌந்தரம் இராமச்சந்திரன் தம்பதியரின் முயற்சியால் இப்பல்கலைக்கழகம் உருவானது. கிராமப்புற சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நோக்கத்திற்காக சிறிய அளவில் 1956 ஆண்டு துவக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அதன் மூன்றாவது சட்டப் பிரிவு 1956 இன் கீழ் 1976-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவித்தது. இதன்படி 1976-ஆம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்திகிராம பல்கலைக்கழகம் மாறியது. இப்பல்கலைக் கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு சில படிப்புகள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது 30 இளங்கலை, 24 முதுகலை, 27 முனைவர் பட்ட ஆய்வு, சில பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளையும் வெவ்வேறு துறைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கை மற்றும் பணியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து படிப்பதையும் பார்க்க முடியும். இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.

Programme List – Gandhigram Rural Institute
S.No.Programme CategoryProgramme NameDuration / ApprovalLink
1UGB.Com. Cooperation (Hons.)8 SemestersView
2UGB.B.A. (Hons.)8 SemestersView
3UGB.A. Economics (Hons.)8 SemestersView
4UGB.Sc. Mathematics (Hons.)8 SemestersView
5UGB.Sc. Physics (Hons.)8 SemestersView
6UGB.Sc. Chemistry (Hons.)8 SemestersView
7UGB.Sc. Home Science (Hons.)8 SemestersView
8UGB.Sc. Textiles and Fashion Design (Hons.)8 SemestersView
9UGB.Sc. Geology (Hons.)8 SemestersView
10UGB.Sc. Computer Science (Hons.)8 SemestersView
11UGB.Sc. Microbiology (Hons.)Not specifiedView
12UGB.Sc. Botany (Hons.)Not specifiedView
13UGB.Voc. Farm Equipments Operation and MaintenanceNot specifiedView
14UGB.Voc. Footwear and Accessories DesignNot specifiedView
15UGB.Voc. Renewable EnergyNot specifiedView
16UGB.Voc. Multimedia Production TechnologyNot specifiedView
17UGB.Voc. Food ProcessingNot specifiedView
18UGB.Voc. Food Testing and Quality EvaluationNot specifiedView
19UGB.Voc. Dairy Production and TechnologyNot specifiedView
20UGB.Voc. Organic Agriculture and Enterprises DevelopmentNot specifiedView
21UGB.Tech. Civil Engineering8 Semesters; AICTE ApprovedView
22UGB.Sc. Agriculture (Hons.)8 Semesters; UGC Approved and ICAR PatternView
23UGB.Sc. B.Ed. Mathematics8 Semesters; NCTE ApprovedView
24UGB.Sc. B.Ed. Physics8 Semesters; NCTE ApprovedView
25UGB.Sc. B.Ed. Chemistry8 Semesters; NCTE ApprovedView
26UGB.Ed.4 Semesters; NCTE ApprovedView
27UGB.A. (Hons.) in Demography and Development Studies8 SemestersView
28UGB.Sc. (Hons.) in Botany8 SemestersView
29UGB.P.E.S. (Bachelor of Physical Education & Sports) (Hons.)6 SemestersView
30UGB.A. English (Hons.)8 SemestersView
31UGB.A. Gandhian Social Work (Hons.)8 SemestersView
32PGM.A. Tamil and Indian Literature4 SemestersView
33PGM.A. Hindi4 SemestersView
34PGM.A. English and Communicative Studies4 SemestersView
35PGM.A. Rural Development Studies4 SemestersView
36PGM.A. Gandhian Studies and Peace Science4 SemestersView
37PGM.A. Economics4 SemestersView
38PGM.Com. Cooperative Management4 SemestersView
39PGM.Sc. Mathematics4 SemestersView
40PGM.Sc. Physics4 SemestersView
41PGM.Sc. Chemistry4 SemestersView
42PGM.Sc. Food Science and Nutrition4 SemestersView
43PGM.Sc. Home Science Extension and Communication4 SemestersView
44PGM.Sc. Textiles and Fashion Design4 SemestersView
45PGM.Sc. Botany4 SemestersView
46PGM.Sc. Zoology4 SemestersView
47PGM.Sc. Microbiology4 SemestersView
48PGM.Sc. Applied Geology and Geomatics4 SemestersView
49PGM.Sc. Geoinformatics4 SemestersView
50PGM.Tech. Renewable EnergyAICTE Approved; 4 SemestersView
51PGM.C.A.AICTE Approved; 4 SemestersView
52PGM.B.A.AICTE Approved; 4 SemestersView
53PGB.A. / M.A. Public Administration (Integrated)5 Years; 10 SemestersView
54PGB.A. / M.A. Sociology (Integrated)5 Years; 10 SemestersView
55PGM.A. Demography and Development StudiesNot specifiedView
56Doctoral (Ph.D.)Ph.D. TamilNot specified—
57Doctoral (Ph.D.)Ph.D. HindiNot specified—
58Doctoral (Ph.D.)Ph.D. MalayalamNot specified—
59Doctoral (Ph.D.)Ph.D. English and Foreign LanguagesNot specified—
60Doctoral (Ph.D.)Ph.D. Rural DevelopmentNot specified—
61Doctoral (Ph.D.)Ph.D. GeoinformaticsNot specified—
62Doctoral (Ph.D.)Ph.D. Applied ResearchNot specified—
63Doctoral (Ph.D.)Ph.D. Lifelong Learning and ExtensionNot specified—
64Doctoral (Ph.D.)Ph.D. Political Science and Development AdministrationNot specified—
65Doctoral (Ph.D.)Ph.D. EducationNot specified—
66Doctoral (Ph.D.)Ph.D. Gandhian Thought and Peace ScienceNot specified—
67Doctoral (Ph.D.)Ph.D. SociologyNot specified—
68Doctoral (Ph.D.)Ph.D. Futures StudiesNot specified—
69Doctoral (Ph.D.)Ph.D. Rural Industries and ManagementNot specified—
70Doctoral (Ph.D.)Ph.D. EconomicsNot specified—
71Doctoral (Ph.D.)Ph.D. CooperationNot specified—
72Doctoral (Ph.D.)Ph.D. MathematicsNot specified—
73Doctoral (Ph.D.)Ph.D. PhysicsNot specified—
74Doctoral (Ph.D.)Ph.D. ChemistryNot specified—
75Doctoral (Ph.D.)Ph.D. BiologyNot specified—
76Doctoral (Ph.D.)Ph.D. Home ScienceNot specified—
77Doctoral (Ph.D.)Ph.D. Computer Science and ApplicationsNot specified—
78Doctoral (Ph.D.)Ph.D. Civil EngineeringNot specified—
79Doctoral (Ph.D.)Ph.D. Rural EnergyNot specified—
80Doctoral (Ph.D.)Ph.D. Applied GeologyNot specified—
81Doctoral (Ph.D.)Ph.D. Agriculture and Animal SciencesNot specified—
82Doctoral (Ph.D.)Ph.D. Physical EducationNot specified—
83Post DoctoralD.Sc. / D.Litt.Not specified—
84PG DiplomaP.G. Diploma in Spatial Technologies2 SemestersView
85PG DiplomaP.G. Diploma in Sanitary Inspectors Course2 SemestersView
86PG DiplomaP.G. Diploma in Epigraphy2 SemestersView
87PG DiplomaP.G. Diploma in Sustainable Social Development2 SemestersView
88DiplomaDiploma in Textile Technology4 Semesters; AICTE ApprovedView
89DiplomaDiploma in Agriculture4 SemestersView
90DiplomaD.Voc. – Refrigerator and Air Conditioner2 SemestersView
91DiplomaD.Voc. – Software Development2 SemestersView
92CertificateCertificate in Two Wheeler Technician2 SemestersView

Source: Gandhigram Rural Institute Website

2025-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்துள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் கல்வித்துறையிலும் கலை துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். மகாத்மா காந்தியின் சிந்தனைகளின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒற்றுமை, மதநல்லிணக்கம், விளையாட்டு, கிராம சேவை மாணவர்களுக்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள இப்பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார்.

அருமையான இயற்கை சூழல், மிக குறைந்த கட்டணம், தரமான கல்வி போன்றவை ஏழை மாணவர்களுக்கு வரம். தமிழ்நாட்டின் பெருமையாக வழங்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தை அனைவரும் அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அங்கு வழங்கப்படும் படிப்புகளை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டு மக்களின் தரமான சிந்தனையைப் பொறுத்து உள்ளது. தரமான சிந்தனைகளை கல்வி நிலையங்கள் மூலம் விதைக்க முடியும். தமிழ்நாடு நகர்மயமாதலில் முதன்மை மாநிலமாக இருந்தாலும், கிராமப்புற மேம்பாட்டிற்கான ஒரு பல்கலைக்கழகம் இயங்குவது மிக அவசியம். கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயரும் போது நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

காந்திகிராம் பல்கலைக்கழகம் தரமான கல்வியை இன்றைக்கும் என்றைக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தரமான ஆசிரியர்கள் தரமான மாணவர்களை உருவாக்குகிறார்கள். அதற்கான சூழல் மிக அவசியம். பல்கலைக்கழகம் பிறந்தது 1956, நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்தது 1976 ஆண்டு. பல்கலைக்கழகத்தின் வயதிற்கு ஏற்ப வளர்ச்சி இன்னும் தேவை. காந்திய பொருளாதாரம் இன்னும் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புற இளைஞர்கள் தொழில் முனைவராக அதிகம் உருவாக வேண்டும். அதற்கான பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். உலக அளவில் ஒரு முன்னோடி பல்கலைக்கழகமாக வளர வேண்டும் என்பதே என்னைப் போன்ற கல்வியாளர்களின் நீண்ட நாள் ஏக்கம். இதுவே மகாத்மா காந்திக்கும், இந்திய தேசத்திற்கும் சேர்க்கும் மிகப்பெரிய பெருமையாகும். பொன்விழா காணும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை வாழ்த்துவோம்!

***********************************************

📚 எழுதியவர் : 

முனைவர் இல.சுருளிவேல்,
உதவிப் பேராசிரியர்,
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம்,
பொன்னேரி – 601 204,
திருவள்ளூர் மாவட்டம்
மின்னஞ்சல்: surulivel@tnfu.ac.in ;

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *