கசல் கவிதை | Kasal Kavithai | Ghazal Poetry

நீயே என் வாழ்வு
நிலைகுலைந்து போகும் என அறியவில்லை !

நீயே என் உலகம்
நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை !

நீயே என் கனவு
விழி உறக்கம் போகும் என நினைக்கவில்லை !

நீயே என் இன்பம்
பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை !

நீயே என் உயிரும்
நடைப்பிணமாய் ஆனதை நான் உணரவில்லை!

நீயே என் அனைத்தும்
நொடிப்பொழுதும் கொல்கின்றாய் உணர்வுமில்லை!

 

எழுதியவர்: 

புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 3 thoughts on “கசல் கவிதை – புலவர் ச.ந.இளங்குமரன்”
  1. அருமையான உணர்வுகள்
   கஜல் பாடல்கள் அருமை

 1. உருது மொழிக் கவிதை பெரும் புலவர் பாட அறிந்தேன் நானும் ஒரு கசல் கவிதை தானே!
  எவ்விடம் செலினும் அவ்விடம் தமிழ் தானே
  கோலோச்சும் என்பதற்கு இக்கவிதை சான்று.வாழ்த்துகள் ஐயா!!! சிறப்பு!¡!
  க.தமிழ்ச்செல்வி, தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *