மரியா கொரினா மச்சாடோக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது ட்ரம்புக்கு கொடுப்பதும் ஒன்றுதான்
– ஆயிஷா இரா.நடராசன்
இலக்கியம், பொருளியல், விஞ்ஞானப் பிரிவுகள் போன்றவற்றிற்கான நோபல் பரிசைத் தேர்வு செய்பவர்கள் அந்தந்தத் துறைசார் வல்லுனர்கள்-கல்வியாளர்கள். சமாதானப் பரிசை முடிவு செய்பவர்கள் நோர்வே பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் அரசியல்வாதிகள். தொடர்ந்து காலனிய மறுப்பாளரான மகாத்மா காந்திக்கு நோபல் பரிசை மறுத்துவந்த ஐரோப்பியவகை ஜனநாயக அரசியல்வாதிகள் இவர்கள்.
இன்று தனிநபர்களாக நோபல் சமாதானப் பரிசுக்குத் தகுதியானவர்கள் இருவர். ஒருவர் ஐநா மனித உரிமையாளர் பிரான்சஸ்கா. மற்றவர் சூழலியல் கேடு, இனக்கொலைக்கு எதிராகச் செயல்பட்டுவரும் கிராட்டா தென்பர்க். அமெரிக்கவகை ஜனநாயகத்தை வெனிசுலாவில் நட்டுவைக்க அமெரிக்க அடியாளாகச் செயல்படும் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட மேற்குலக-அமெரிக்க நலன் அரசியலே காரணம்.

சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கும் வெனிசுலாவின் மரியா டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய ஆதரவாளர். இடதுசாரி வெனிசுலா அரசைக் கவிழ்க்கச் செயல்பட்டு வருபவர். வெனிசுலா மீது போர்தொடுக்கவும் அதனது தலைவர் மதுரோவை அழிக்கவும் டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். இவரைப் போராளி என்று அழைப்பது கொடுமை. அர்பன் நக்சல் போன்றவர் என்பது அதைவிடக் கொடுமை. டிரம்ப்புக்குக் கெடைக்கல. அதனால் மற்றவர் போராளி என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
எப்படியாவது இடதுசாரி அரசை தூக்கி எறிவதற்கு ஏனைய ஐரோப்பிய முதலாளிய நாடுகளோடு சேர்ந்து சதி செய்யும் இவருக்கு நோபல் கொடுத்திருப்பது ட்ரம்புக்கு கொடுத்திருப்பது இரண்டும் ஒன்றுதான்..
கொடுமை என்னவென்றால் இதன் தீவிரம் புரியாமல்..
பேரழிவு வலதுசாரி அரசியலின் அட்சரம் தெரியாமல்..
நம்ம ஆட்களே.. இந்த நோபலை கொண்டாடுவது தான்..
இது அறியாமையின் உச்சம் என்று தான் நான் சொல்வேன்.
எழுதியவர் :

✍️ – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


உண்மைதான். டிரம்ப்பும் -மரியாவும் ஒன்றுதான்.உலக உள் அரசியலை நாம் உள்வாங்காததின் விளைவே மரியாவிற்க்கு கிடைத்த நோபலை கொண்டாடுகிறோம்ம்