நூல் அறிமுகம்: போயிட்டு வாங்க சார் – ச.மாடசாமிபுத்தகத்தின் பெயர் : போயிட்டு வாங்க சார்
ஆசிரியர் : ச.மாடசாமி
பக்கங்கள் : 63
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 40
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/poyitu-vaanga-sir-751/
போய்ட்டு வாங்க சார் – மொழிபெயர்ப்பு நூல் அல்ல. இது Good bye, Mr.Chips வாசித்த அனுபவம் மட்டுமே எனத் தொடங்குகிறது…..
Good Bye, Mr. Chips – 1933ல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934ல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன். இந்நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
கதையின் நாயகன் Mr. Chipping சுருக்கமாக Mr. Chips. தனது 22வது வயதில் புருக்பீல்டு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து, 44 ஆண்டுகள் தொடர்ந்து அப்பள்ளியிலேயே பணியாற்றி ஓய்வு பெறுகிறார். அவரது வாழ்க்கை முழுவதும் பள்ளியோடும், மாணவர்களோடுமே பயணிக்கிறது. ஒரு வருட இல்லற வாழ்க்கை அவரது ஆசிரியர் பணியில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் அவரது மனைவி. ஓய்வு பெற்ற பின்பும் பழைய மாணவர்களோடும் மற்றும் தற்போதைய மாணவர்களோடும் நட்புறவோடு தனது உறவைப் பேணி வருகிறார். அவரது மரணத்தோடு கதை நிறைவடைகிறது. அவரின் கடைசி வார்த்தைகள் : ” நானா பாவம்? எனக்கா குழந்தைகள் இல்லை? எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள். ஆயிரக்கணக்கில்…. எல்லாம் அப்பளம் பசங்க!….”