பிரபல அறிவியல் எழுத்தாளர் லிங்கன் பார்னெட் தி யுனிவர்ஸ் அண்டு டாக்டர் ஐன்ஸ்டீன்(The Universe and Dr. Einstein) என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஒரு முன்னுரை வழங்கினார். அதில் அறிவியல் நூல் என்பது (பொது தளத்தில்) எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஐன்ஸ்டீன் தனது கருத்தாக்கத்தை முன்வைத்தார். அது மூன்று அவரது பிரபலமான கூற்றுக்களை கொண்டிருந்தது.

The Universe and Dr. Einstein by Lincoln Barnett | Goodreads

• உங்களால் ஒரு விஷயத்தை எளிமையாக சொல்ல (எழுத) முடியவில்லை என்றால் நீங்கள் இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

• எளிமைப்படுத்துங்கள். ஆனால் மிகமிக எளிமையாக அல்ல. அறிவியலின் அடிப்படையையே சிதைக்கும் அளவுக்கு எளிமைப்படுத்துவது அறிவியல் எழுத்து அல்ல.

• அறிவியலை பொதுத்தளத்திற்கு எடுத்துச்செல்வதன் நோக்கம் புதிய கேள்விகள் புதிய சாத்தியங்கள் உருவாக்கத்தான், அறிவு தகவலைவிட கற்பனை செழிப்பும் படைப்பாக்க அணுகுமுறையும் அறிவியல் துறையை மேலும் வளர்த்திட உதவும்.

சமீபத்தில் ராண்டி ஹாட்டர் எக்ஸ்சைன் லிட்டர்ரி ஆப் இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதினார்/ அவர் ஒரு விஷயத்தை மிக அழகாக குறிப்பிடுகிறார்.

ஒரு மருத்துவர் தனது துறை சார்ந்து எப்படி ஒரு நோயை அணுகுகிறார் பார்க்கிறார்என்பதற்கும் பொதுவெளியில் அதே நோய் குறித்து மக்கள் பேசுவது என்ன என்பதற்கும் இடையே அறிவியல் எழுத்து பாலமிடவேண்டும். ‘மையோ கார்டியல் இன்ஃபர்கேஷன்’ (Myocardial infraction) என்பது மக்கள் பார்வையில் மாரடைப்பு அறிவியல் எப்படி செயல்படுத்தப்படுகிறது(Pursued) என்பதற்கும் அறிவியல் எப்படி பார்க்கப்படுகிறது (Perceived) என்பதற்கும் இடையே அறிவியல் எழுத்தாளன் ஒரு மெல்லிய கண்ணாடி மேல் மிகமிக கவனமாக நடந்துபோக வேண்டி உள்ளது.

மருத்துவம் மட்டுமல்ல/ ஏனைய துறை சார்ந்த எழுத்துக்களுக்கும் அது பொருந்தும். பாப்சி(Pop-Sci) என்று சொல்லப்படும் பாப்புலர் சயின்ஸ் என்பது பொது பார்வையாளர்களை வாசகராக கொண்ட அறிவியல்வெளி. இதனை பெரும்பாலும் அறிவியல் இதழியல் என்கிறோம்.

இந்த பாப்சி வெறும் எழுத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. திரைப்படம், தொலைக்காட்சி, ஆவணப்படங்கள், குறும்படம் ஏன் அறிவியல் புனை கதைகளையும், வலைப்பக்கங்களையும் கூட இதில் சேர்க்கிறோம். தமிழில் ஒரு காலத்தில் கேள்வி பதில் வடிவத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் இப்படியான பாப்சி கலாச்சார அடித்தளத்தை தொடங்கி வைத்தவர். பிற்காலத்தில் சுஜாதா அதை தொடர்ந்தவர்.

Malayapuram Singaravelu - Wikipedia

ஆனால் விஞ்ஞானத்தை கவிதை வடிவத்தில் வழங்குவதுதான் முதலில் தொடங்கி இருக்கிறது. 1791இல் ஏராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வின் இவரது பேரன்) – தாவரவியல் பூங்கா என்று இரண்டு நெடுங்கவிதைகள் எழுதினார். அந்தக்கவிதையில் அவரது மூன்று கண்டுபிடிப்புகள் அடக்கம். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் நமது பட்டினப்பாலை நூலில் காவிரிப்பூம்பட்டினத்தின் கப்பல் தளம் குறித்த விவரங்களை அறிவியல் சாகச கவிதை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.Darwin - Natural History Museum

 

கிரேக்க-ரோமானிய அறிவியல் கையேடுகள் பிரபலமானவை. நான் வியந்துபோன விஷயம் 1561 இல் நடக்கிறது. அறிவியல் பற்றிய ஆறுகிசுகிசுக்கள்! லேடி இசபெல்லா. இவரது  முழுப்பெயர் இசெபெல்லா கார்ட்ஸெ.தி சீக்ரெட்ஸ்(அதாவது ரகசியம்) எனும் தலைப்பில் இத்தாலிய ரசவாதம் பற்றிய ஆறு கிசுகிசுக்களை

அவர் எழுதுகிறார். எந்த கொம்பனாக இருந்தாலும் (நாக்கை தொங்க போட்டு) இது என்ன…. என்று வாசிக்க வந்து விடுவான்.

இந்த அறிவியல் கிசுகிசுக்கள் (அதாவது இசபெல்லா ரகசியங்கள்) இத்தாலியையே 16-ம் நூற்றாண்டில் ஆட்டிப்படைத்திருக்கிறது. இந்த ரகசியம் தெரிந்தால் நீங்கள் வீட்டிலேயே ஆறு விஷயங்களை செய்யலாம். முதல் கிசுகிசு முக சாயங்கள் பற்றியது, இரண்டாவது இயற்கையை உங்களுக்கு அடிமையாக்கி மருந்துகளை தயாரிப்பது, மூன்றாவது கிசுகிசு விந்து வீரிய அறிவியல் மூலம் படுக்கையில் வெற்றி. நான்காவது எப்பேர்பட்ட கரையையும் அகற்றும் பளீர் வெளுப்பு ஆடைதூய்மை  பிறகு சமையலறை கிசுகிசுவையும் ஆறாவதாக மிகவும் பிரபலமடைந்த வீட்டிலேயே நாணயம் தயாரிப்பதும் இத்தாலியை உறங்க உறங்கவிடாமல் செய்த அறிவியல் எழுச்சியாகும்.

16ஆம் நூற்றாண்டில் மக்களிடையே வெற்று அட்டைகளில் வைத்து அச்சாகி இந்த அறிவியல் கிசுகிசுக்கள் அதிவேகமாக பரவின. இசெபெல்லா பெண் உடல்பற்றிய ‘ரகசியங்களை‘ அடுத்து கிசுகிசுக்களாக வெளியிடத் தொடங்கினார். இந்த மொத்த அறிவியல் பாய்ச்சல் 27 ஆண்டுகள் நடந்ததாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இசெபெல்லா பற்றி இன்றுவரை யாருக்குமே முழு சரித்திரம் ஒரு போட்டோகூட கிடையாது… தெரியாது… ஆகப் பெரிய ரகசியம் அதுதான்.

சீக் ரெடி டெல்லா கோர்டீஸ் இதுதான் கிசுகிசு அறிவியல் நூலின் தலைப்பு. ஒருவேளை இதனை பல பெண்கள் எழுதிஇருக்கலாம். பல நூற்றாண்டு கடந்து நம் தமிழில் ஔவை பெயர் நிலைத்தது போலவே இசெபெல்லாவை கருதவும் வாய்ப்புண்டு.இசெபெல்லா பற்றிய ஆறு கிசுகிசுக்கள் அடுத்தடுத்து உலகெங்கும் பரவின/ ஆண்களின் ரகசிய ஆய்வுச்சாலைகளுக்குள் புகுந்து ரசவாதம் பற்றிய ரகசியங்களை உலகறிய வைக்கும் துப்பறிவாளராக முதலில் அவர் சித்தரிக்கப்பட்டார்…. அவர்தான் அந்தகால ஜேம்ஸ்பாண்ட் அந்தஸ்து பெற்றவர்.

இரண்டாவது அவர் ஒரு பயணப் பெண் ரசவாதியாக அறியப்பட்டார். ஒரு நடமாடும் நாடோடி ஆய்வகம் தங்கள் ஊரில் இரவில் கடந்து போய்விட்டதாக பல ஊர்களில் பேசு பொருளானார். போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு பறக்கும் கம்பளத்தில் அவர் வானத்தில் பறந்ததாக ஒரு கிசுகிசு. சமூகத்தில் நோய் பரவுதல் முதல் மாந்திரீகம் பேய் பிடிப்பதுவரை எது நடந்தாலும் அந்த வீதிகள் வழியே இசெபெல்லா கடந்துபோவார். அவரது ரகசிய ஆய்வு வாகனம் வெறும் காற்றின் வழியே உங்களை குணப்படுத்திவிடும். கற்பூரம், வெள்ளி மற்றும் கந்தகம் இவைபற்றி மனம், உடல் மற்றும் ஆன்மா சம்பந்தமானது என இத்தாலியில் ஒரு ஐதீகம் இருந்தது. இசெபெல்லா  கிசுகிசு அறிவியல் அதை உடைத்தெரிந்தது கற்பூரம், வெள்ளி மற்றும் கந்தகத்தை பெண்கள் தொடக்கூடாது எனும் ‘தீட்டு’ப் பழக்கத்தை உடைத்தெரிந்து, ஆம்பர் மற்றும் கஸ்தூரி மஞ்சளிலிருந்து பெண் தனது கைகளால் தயாரிக்கும் உலகளாவிய மருந்தை  நாள்பட்ட தழும்புகள் வெள்ளைப் புள்ளிகளின் மேல் தடவினால் குணமாகும் என்பது வரை இசெபெல்லா ஆதிக்கம் இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ந்தது/ அறிவியலை மக்களிடம் எடுத்துச்செல்ல நாம் செய்யவேண்டியது என்ன என்பதை ஏதோ விதத்தில் அது புரியவைக்கிறது.

இசெபெல்லாவின் அறிவியல் நூல் ஏற்படுத்திய ஆகப்பெரிய தாக்கத்தின் காரணம் அதன் அட்டையிலேயே இடம் பெற்றிருந்த ஒரு வாசகம்.‘எல்லா ரகசியங்களும் அறிந்து வாசித்த பிறகு புத்தகத்தை எரித்து விடவும்’…. இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் யார்தான் இதை வாசிக்காமல் இருப்பார்கள். வாசிப்பாளனுக்கு ஆர்வத்தை கிளறி அலறியபடி புத்தகத்தை வாங்கி வாசிக்கும் பதற்றத்தை தரும் எழுத்துதான் வெற்றி அடையமுடியும் என்பதற்கு இசெபெல்லா சரியான முன் உதாரணம்.அடுத்துஇசெபெல்லாவாதிகள் இங்கிலாந்தில் முளைத்தார்கள்.

1830 என்றுநினைக்கிறேன். வானியலாளர் ஜான் ஹெர்ஷல் பிரபலமான அறிவியலின் நுணுக்க எழுத்துக்கள் மீதான தன் கருத்துக்களை தனது நண்பர்தத்து விஞானிவில்லியம் வீவாலுக்கு எழுதிய கடிதத்தில் முன்வைத்தது பிரபலமாக இன்றுஷேர் செய்யப்படுகிறது.

‘ஒவ்வொரு குறிப்பிட்ட அறிவியல் அடிப்படையும் உண்மையில் போராடி கண்டுபிடிக்கப்பட்டது…. உண்மையில் என்ன செய்யப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்யும்… எப்படி எதை நோக்கி செல்லும் என்பதை எழுத்து விவரிக்கவேண்டும்’ என்கிறார்அவர். 1834ல் ஆன்திகனெக்ஷன் ஆஃப்திபிசிகல்சயின்ஸ் நூல்வெளிவந்தது.

Mary Somerville - Wikipedia

இதை எழுதியவர் மேரிசோமர் வைல் எனும் ஸ்காட்லாந்து அறிவியல் பெண் எழுத்தாளர் இவர் கணித அறிஞர் உண்மையான விஞ்ஞானி. இவருடையது தான் உலக அளவிலான மிகப்பிரபலமான – மக்கள் அறிவியல் எழுத்து.

 

எந்த அளவிற்கு இவரது எழுத்துக்கள் பிரபலமாக இருந்திருந்தால் இவர் பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழககல்லூரி ஒன்றிற்கு சோமர்வைல் கல்லூரி என்றே பெயர்வைத்திருப்பார்கள்!.

இன்றும்அவரது‘ஹெவன்ஸ்’ புத்தகத்தின் அறியகட்டுரைகள் பாடமாக வைக்கப்படுகின்றன. 2017ல் இங்கிலாந்து – ஸ்காட்லாந்துராயல்வங்கியின்பத்து டாலர்ரூபாய் நோட்டில் மேரிசோமர்வைலின் படம்  பொறிக்கப்படும் அளவுக்கு அறிவியல் எழுத்துக்களை இங்கிலாந்துநேசித்தது. இந்த வரிசையில் தான்சார்லஸ்டார்வினின் உயிரினங்களின் தோற்றம்நூல் 1859ல் வந்தது.

எனவே இருவகையானவர்கள் பொதுவெளியில் அறிவியலை எழுதினார்கள்எழுதுகிறார்கள். ஒன்று அறிவியல் பத்திரிக்கையாளர்கள்- இதழாளர்கள் மற்றதுஅறிவியலே – விஞ்ஞானிகளே எழுதுகிறார்கள்.

தமிழிலும் அதுதான்நடக்கிறது. வெகுஜன இதழ்கள்ஊடகங்களில் அறிவியல் எழுத்துககள் ஊக்குவிக்கப்ட வேண்டும். அந்தஅவசியத்தை – அழுத்தத்தை தருமளவு சுவாரசியமான மக்கள் ஆதரவை பெற இன்னும் நாம் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. சுவிட்காரம் காஃபி என்பது போலஇலக்கியம், சினிமா அரிசியல் சோதிடம் என்பது இன்று அடிப்படைபத்திரிக்கை ‘தர்மம்’ இதை கலை இலக்கியம், சினிமா அரசியல் அறிவியல் என்று மாற்ற வேண்டும். அதற்கு இசெபெல்லாவாதிகளாக மாறவேண்டி உள்ளது.

••••••••••••••••••••••
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *