அவர்கள்
என்னைப்பற்றி,
பேசுகிறார்கள்.
அவர்களின் நண்பர்களைப்பற்றியும்
பேசுகிறார்கள் .
பேசிக் கொண்டிருப்பவர்களில்
யாரேனும் எழுந்து சென்றால்,
அவரைப்பற்றியும்
பேசுகிறார்கள்.
கடைசியாக எஞ்சியிருப்பவர்
யாரைப் பற்றி,
யாரிடம் பேசுவதெனத்தெரியாமல்
அவர் அவரிடமே,
பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் எழுந்து சென்றபிறகு
பேசிய புறணிகளை,
நான்கு சுவர்களும்
தங்களுக்குள்,
பேசிக் கொண்டிருக்கின்றன.
எழுதியவர்
ஆ.சார்லஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பு, நல்ல கவிதை
வாழ்த்துக்கள் நண்பா சிறப்பான கவிதை வரிகள்