நாடு விடுதலை அடைந்த பிறகு வரலாறு காணாத விவசாயிகளின் எழுச்சி  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது..குறிப்பாக இந்தியாவுடன் வர்த்தக உறவைப் பலப்படுத்த விரும்பும் கனடா போன்ற மேலை நாடுகளின் அரசுகள், விவசாயிகளின் எழுச்சி கண்டு திகைக்கின்றனர். மறு பக்கம்

 இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் விவசாயிகளின் எழுச்சியைப் பிசுபிசுக்கச் செய்ய மெய் நிகர் பொய்களைப் பரப்புகின்றன. அதையும் புறம் தள்ளி விவசாயிகளை எதையும் நம்பும் வலுவற்ற ஏமாளிகள் என்று கருதியோரை இந்த எழுச்சி நடுநடுங்கச் செய்து வருகிறது. நிராயுதபாணியான அந்த விவசாயிகளின் வலுவை உலகமே காண்கிறது.

    ஆலோசகர்கள் கொடுத்த புளுகு மூட்டைகளை நம்பிய மோடியின் கருணை தோற்றம் உண்மை என்னும் புகை படிவதால் பொலிவிழக்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக  இந்திய விவசாயிகள் கேட்ட பொய்களின் அளவு படிப்படியாகக் கூடி இன்று  கொதிநிலைக்கு விவசாயிகளைத் தள்ளிவிட்டது பொய்களை வரிசைப்படுத்திப் பார்த்தால்தான் இது புரியும்

மூத்த பொய்

  1. மிகவும் மூத்த பொய். வேளான் பொருளுக்குக் கட்டுபடியான விலை நிர்ணயிப்பதாகக் கூறுவதாகும்  விளை பொருள்களுக்கு விலை நிர்ணயிப்பதில் அரசு மோசடி செய்வதைப்  பத்திரிகை படிப்போர் அறிவர். . விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும் கட்டுபடியான விலை கேட்ட பொழுதெல்லாம் அரசு செவிசாய்க்கவில்லை. இன்று விவசாய விளை பொருளுக்குக் கட்டுபடியான விலை நிர்ணயிப்பது  பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்து என்று பிரச்சாரம் செய்வதோடு மோடி மேலும் சொல்கிறார் ஆன்லைன் மூலம் சந்தைகள் இனைக்கப்பட்டுவிட்டன. விலை நிலவரம் தெறியும் ஒரு விவசாயி தனது விளை பொருளை எங்கு கூடுதல் விலை இருக்கிறதோ அங்குக் கொண்டு விற்க முடியும் என்று  பிரச்சாரம் செய்கிறார். இதன் மூலம் சிறு குறு விவசாயிகளை ரிடெயில் அம்பானி. பிர்லா. உயரத்திற்கு  உசத்திவிடும் என்று கனவு காணச் சொல்கிறார்

பண மூட்டைகளின் சந்தை . 

  1. இன்று கரும்பு.  விவசாயிகள் படுகிற  அவஸ்தையை இனிப்பு திங்கிறவன் உணரமாட்டான் என்பதால் மோடி புளுகுவதில் கூச்சப்படுவதே இல்லை இன்றையத்தேதியில் உத்திர பிரதேச கரும்பு விவசாயிகளை சக்கரை ஆலைகள் பாக்கிகள் 12500 கோடி ரூபாய் என்று அரசே கூறுகிறது. தமிழ் நாடும் இது விதிவிலக்கல்ல கரும்பு இனிக்கும் ஆனால் கரும்பு விவசாயிக்கு அது கசக்கும். முன்பேர வர்த்தகம் விவசாயிக்கு விலை  உத்தரவாதம் செய்வதாக ஒரு பெரிய புளுகினை விவசாயிகள் நம்ப மறுப்பதற்குக் கரும்பு விவசாயி நிலை உணர்த்திவருகிறது. அரசு கரும்பு விலையை நிர்ணயித்தாலும் அந்த விலையைக் கொடுக்காமல் சக்கரை ஆலை பாக்கி வைக்கிறது.இதில் தனியார் உடமைக்கும் அரசுடைமைக்கும் வேறுபாடு இல்லை விவசாயிகளைக் கடனாளி ஆக்குவதற்கு இதுவும் பங்களிக்கிறது.



ஆதிகால புளுகு. 

  1. மோடி அரசின் புளுகிலேயே  அடுத்த ஆதிகால புளுகு விவசாயத்தின் உயிர் நாடியான பாசனவசதிக்காகக் கொடுத்த முழக்கமே . 2015ம் ஆண்டு பிரதம மந்திரி கிருஷி சின்செய் யோஜனா திட்டம் என்றார். 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது என்றார். ராம பஜனை போல் “  ஹார் கேட் கோபாணி”( ஒரு சொட்டுநீர் கூடுதல் விளைச்சல்”) என்று போகிற இடமெல்லாம் ஜபித்தார். வட மாநில விவசாயிகள் மோடியை நம்பினர்

  2.  ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் இனைந்த வேலை என்று இருந்ததாலும். தனியார் மூலமே பாசன வசதிகளைச் செய்ய வேண்டும் என்று இருந்ததாலும் திட்டம் பற்றி அரசு வலைத் தளமே 2020ல் The Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY) கொடுக்கும் தகவல் என்ன? ஒதுக்கிய 50 ஆயிரம் கோடியில் வெறும் 8ஆயிரம் கோடிகளே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அறிவித்த பாசனத்திட்டங்களில் 10 சத வேலையே நிறைவேறியிருக்கிறது.  மாநில அரசுகள் 32ஆயிரம் கோடிகள் செலவழித்துள்ளன.தனியார் மூலம் செலவு செய்ய வேண்டுமென்பதால் பணம் செலவானது ஆனால் கடைமடைக்கு தண்ணீர் வர மறுக்கிறது. ஏரிகுளம் மேடாகிறது நிலத்தடி நீர் கீழே போகிறது. என்று தமிழக விவசாயிகள் புலம்புவது போல் ஹாரியனா விவசாயிகளும் புலம்பினர்.  ஏன் மைய அரசு ஒதுக்கிய பணம்  செலவாகாமலே இருக்கிறது. இதில் உள்குத்து உண்டு மாநில அரசு விரும்பும் கான்டிராக்டரை மத்திய அரசு விரும்பவில்லை எனவே  ஒதுக்கிய பணம்  அப்படியே இருக்கிறது.

  3. இன்று இந்தியாவில் 160 மில்லியன் ஹெக்டர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது இதில் 22 மில்லியன் ஹெக்டர் நிலமே வாய்க்கால் பாசன வசதி கொண்டது( அதன் லட்சணத்தைக் காவிரி பாசன விவசாயி பஞ்சாப் விவசாயி நன்கு அறிவான் .. 39 மில்லியன் ஹெக்டர் நிலத்தடி நீரை நம்பிநிற்கும் விவசாயம் மீதி வாணம் பார்த்த பூமி. சுருக்கமாகச் சொன்னால் சுமார் 140 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலம் பருவ மழையை நம்பிய விவசாயமாகும். இதில். மழை நீர் சேகரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அதற்கு நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்தாமல் சாத்தியமில்லை.. மோடி அரசு வாயால் திட்டங்களை அறிவிப்பதால் விவசாயி ஏமாறத் தள்ளப்படுகிறான். அந்த ஏமாற்றங்கள் திரண்டு இன்று பொங்குகிறது.



நவீன ஆகாச புளுகு

  1. – விவசாயிகளை வாழ வைக்கப் பயிர் காப்பீடு திட்டத்தைப் புரட்சிகரமாக மாற்றிவிட்டதாக மோடி அரசு மார் தட்டுகிறது. இதனை நவீன ஆகாச புளுகு என்றால் மிகை அல்ல. இவரது அறிவிப்பினால்.  தனியார் நிதி நிறுவனங்கள்   கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள்.  காப்பீடு திட்டம் விவசாயிகளை ஏமாற்றியதே தவிர கை கொடுத்துத் தூக்கிவிடவில்லை என்பதைப் பொருளாதார செய்தி படிப்பவர்கள் நன்கு  அறிவர்  ஒரு தனியார் காப்பீடு நிதி நிறுவனம் விவசாயிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் பெறுகிற பிரிமியம் தொகை எத்தனை ஆயிரம் கோடி பயிரை இழந்த விவசாயி நட்ட ஈடு பெறபடும் கஷ்டம், லாபமாக நிறுவனம் பெற்றது இவைகளை பரிசீலித்தால் ஒரு கணக்கு கூறுகிறது பெரும்பாலான விவசாயிகள் பிரிமியத்தை விடக் குறைவான  தொகையே  கிடைத்தது அதுவும் காலம் கடத்தியே பெறமுடிகிறது என்பதே அனுபவம்.

ஆக மூத்த பொய்களான கட்டுபடியான விலை, நீர்ப்பாசன வசதி பற்றிய அறிவிப்புகள் நவீன ஆஹாசபுளுகான  பயிர்பாதுகாப்பு திட்டத்தின் பொய்மை இவைகளே விவசாயிகளின் கோபமாகத் திரண்டு மோடி அதிகாரத்தை உலுக்குகிறது. மோடி அரசால் இதனை உணர ஏன் இயலவில்லை.

மூடப் பொருளாதாரமும் மோடி அரசும்

இந்தியாவில் இடதுசாரிகளைத்தவிர மற்ற அரசியல்கட்சிகள் மேலைநாட்டுப் பொருளாதார முறைகளைப் பின்பற்றுவதே வளர்ச்சிக்கு உதவுமெனக் கருதுகிறார்கள்

 மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய நேரடியாக ஈடுபடுகிற உழைப்பாளி குடும்பம் அங்கு மிகக் குறைவு.

அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகளில் விவசாயத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை ஐந்து சதத்திற்கும் குறைவு ஆனால் இந்தியாவில் அரசு தரும் புள்ளிவிவரமே 47 சதம். அதாவது 60 கோடி மக்கள். விவசாயத்தைச் சார்ந்து இருக்கிறார்கள் அதிலும் வறுமையில் வாழும் சிறு குறு விவசாயிகளே 90 சதம்.

  ஆளும் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு மூளையாக இயங்கும் நிபுணர்களும் மேலைநாட்டுப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வுகளைத் தேட முயல்வது சரியல்ல என்பதையே இந்த எழுச்சி காட்டுகிறது. ஒரு வேளை அரசு இந்த சட்டங்களைத் தற்காலிகமாகத் தூங்க வைத்தாலும் கட்டுபடியான விலை கிடைத்தாலும் சிறு குறு விவசாயிகளின் வறுமை போகாது. அவர்களை ஏமாற்றும் சந்தை கட்டமைப்பு அவர்களை ஓட்டாண்டியாக ஆக்கிவிடும். நில உடமையில் மாற்றம் வேண்டும். அதிலும்  பண்ணை விவசாயம், தனியார் விவசாயம். என்ற பாகுபாட்டில் தெளிவு வேண்டும் நவீன கல்வி முறையால்  சிறு குறு விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளை நவீன தொழில்களால் ஈர்க்கப்படவேண்டும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவோரின் வருவாய் வருடா வருடம் உயர வழிகள் புகுத்தப்பட வேண்டும். கிராமங்களின் ஆரோக்கிய சூழலைப் பேணுகிற முறையில் கட்டமைப்புகள் கட்டப்படவேண்டும். அதற்கு பெரும் திரளாக இருக்கும் உழைப்பு சக்தியைப் பயன்படுத்தும் அரசியல் அறிவு ஆளுவோருக்கு வேண்டும்

இன்று நாம் காண்ப தென்ன? மேலைநாடுகளும் நெருக்கடியில் தவிப்பதைக் காண்கிறோம் .

  இந்தியாவைப் போல் இல்லாமையோ, போதாமையோ பிரச்சினைகளாக அங்கு இல்லை. அங்கு முதலாளித்துவ பணப் புழக்க கட்டமைப்பே நெருக்கடிக்கு அடிப்படையாகும். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு இல்லாமையும் போதாமையும் நமது பிரச்சினைகளாகும் இந்த வேறுபாட்டை புரியதமூடர்களே அரசாங்க கட்டமைப்பிலிருந்து கொண்டு நாட்டையும் மக்களையும் சீரழிக்கிறார்கள்.   இந்த விவசாயிகளின் கோபம் அரசியல் ஆக்க சக்தியாக உயர்ந்தால்  சீரழிவைத் தடுக்க முடியும்!



One thought on “புளுகு மூட்டைகளும், ஏமாற மறுக்கும் விவசாயிகளும் – வே .மீனாட்சிசுந்தரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *