Great Blue Hole article by Yercaud Ilango

பெரிய நீலத் துளை (Great Blue Hole)

பெரிய நீலத் துளை (Great Blue Hole) 

– ஏற்காடு இளங்கோ

அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் பெலிஸ் என்ற சிறிய நாடு உள்ளது. இந்த நாட்டில் உலகின் மிகப்பெரிய கடல் துளை (Marine Hole) ஒன்று காணப்படுகிறது. இதற்கு பெரிய நீலத் துளை (Great Blue Hole) என்று பெயர். இது பெலிஸ் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் பெலிஸ் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே இது பெலிஸ் நீலக் குழி (Belize Blue Hole) என்றும் அழைக்கப்படுகிறது.

இது வட்ட வடிவமானது. இது 318 மீட்டர் (1,043 அடி) விட்டம், 124 மீட்டர் (407 அடி) ஆழம் மற்றும் 70,605 சதுர மீட்டர் (7,60,500 சதுர அடி) பரப்பளவையும் கொண்டுள்ளது. இது உண்மையில் ஒரு பெரிய கடல் குகையால் ஆன மூழ்குக் குழி ஆகும். இது ஒரு சிறிய அட்டோல் (Atoll) எனப்படும் ஒரு வளைய வடிவ தீவில் உருவாகியுள்ளது. இந்தக் குழி நீருக்கடியில் மூழ்கி உள்ளது. இது கார்பனேட் மற்றும் பவளப் பாறையால் சூழப்பட்டுள்ளது.

நீல துளை - தமிழ் விக்கிப்பீடியா

கடந்த பனி யுகங்களில் கடல் மட்டம் தற்போது இருப்பதை விட 100 – 120 மீட்டர் (330 – 390 அடி) குறைவாக இருந்தது. இந்தச் சமயத்தில்தான் இந்தக் கடல் துளை உருவானது. சுண்ணாம்பு, ஜிப்சம் மற்றும் பளிங்கு போன்ற பாறைகள் கரைந்து நிலத்தடி பாதை அல்லது குகை உருவானது. இந்தக் குகையில் ஆயிரக்கணக்கான கனிம உருவாக்கமான ஸ்டாலாக்டைட்டுகள் (Stalactites) தொங்கிக் கொண்டுள்ளன. இதைப் பகுப்பாய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் இந்தக் குகை 4 கட்டமாக உருவானது எனத் தெரிய வந்தது. இது 1,53,00, 66,000, 60,000 மற்றும் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பனி யுகத்தின் முடிவில் கடல் மட்டம் உயர்ந்தவுடன் இதன் செயல்முறை முடிந்தது. கடல் மட்டம் உயர்ந்ததால் இது கடலுக்குள் மூழ்கி விட்டது. ஆனால் இந்தத் துளை மட்டும் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது. ஆகவே நீலக் குழி என்ற பெயரைப் பெற்றது. இதில் நன்னீர் மற்றும் உப்பு நீர் இரண்டும் உள்ளது.

இந்த நீலத் துளை 1971 ஆம் ஆண்டில் ஜாகுஸ் கூஸ்டோ (Jacques Cousteau) என்பவரால் பிரபலமடைந்தது. இது நீரில் மூழ்காளர்களுக்கு (Divers) பிரபலமான இடமாக உள்ளது. 24 முறை டைவிங் செய்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இதை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டில் டிஸ்கவரி சேனல் வெளியிட்ட “பூமியின் 10 மிக அற்புதமான இடங்கள்” பட்டியலில் இது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கட்டுரையாளர் : 

 

– ஏற்காடு இளங்கோ

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *