பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி கிரெட்டா துன்பர்க் பற்றி ஆதி வள்ளியப்பனின் எளிய நடையில் எதிர் வெளியீடாக வந்த இந்நூல் குழந்தைகளும் – பெற்றோர்களும் ஒரு சேர வாசிக்க வேண்டிய நூல். கிரெட்டா துன்பர்க் என்ற பெயர் சமீபத்தில் அனைவராலும் அறியப்பட்ட ஒன்று . பருவநிலை மாற்றம் குறித்த தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகளின் தலைவர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அதிலும் குறிப்பாக உலகளவில் பள்ளி குழந்தைகளும் கிரெட்டாவின் போராட்ட வடிவத்தை முன் எடுத்தார்கள்.
அப்படி என்னதான் செய்தாள் கிரெட்டா? கிரெட்டாவின் சொந்த நாடு ஸ்வீடன். பள்ளி செல்லும் சிறுமியான கிரெட்டா பார்ப்பதற்க்கு அமைதியானவள். அடிப்படையில் அவளுக்கு ஆட்டிசத்தின் ஒரு வகையான அஸ்பெர்கர் குறைபாடுயுடையவள். அதனால் ஒதுக்கி இருக்கும் இயல்பும் உண்டு. அதே நேரம் மன உறுதியும் , எடுத்த வேளையை பெரும் ஈடுபாட்யுடன் செய்து முடிக்கும் தன்மையும் அவளிடம் இருந்தது.

ஒரு நாள் பள்ளியின் ஆசிரியர் பருவ நிலை மாற்றம் பற்றி வகுப்பறையில் பேசினார். அந்த உரையாடலில் துருவ கரடிகள் அழிவு, பனிப்பாறைகள் உருகுதல், உலக வெப்பமயம், கடல் மட்ட உயர்வு, தீவிர வறட்சி, இதனால் புவிக்கும் , மனிதர்களுக்கும் எதிர்காலம் என்னவாகும் என்பதனை பற்றியதாக இருந்தது.
மேற்கண்ட உரையாடலில் கிரெட்டாவை தொந்தரவு செய்தது, பல இரவுகள் உறக்கத்தை கெடுத்தது. அதற்கு ஏதாவது தன்னளவில் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தாள். பள்ளி செல்வது கூட அவளுக்கு பிடிக்கவில்லை. எந்நேரமும் காலநிலை மாற்றம் குறித்த சிந்தனை. அதற்கான தொடர் வாசிப்பு, தேடல் என தொடர்ந்தாள். எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாத போது பள்ளிக்கு சென்று என்ன பயன்? மிகப் பெரிய அச்சுறுத்தலை மிக எளிதாக புரிந்து கொண்டாள் என்று தான் சொள்ள வேண்டும். அத்தோடு அல்லாமல் முதலில் தனது பெற்றோருக்கும் புரிய வைத்தாள். தனது வீட்டில் இருந்து முதல் அடியை எடுத்து வைத்தாள். முடிந்த மட்டும் விமான பயணத்தை குறைத்து கொண்டாள். சைவ உணவிற்கு மாறினார்கள். கால்நடைக்கும் _ காலநிலைக்கும் உள்ள தொடர்பை கணக்கில் கொண்டு. வீட்டில் காய்கறி தோட்டம், சூரிய ஆற்றல் பயன்பாடு .இதன் தொடர்ச்சியாக அரசை ஏன் வலியுறுத்த கூடாது என நினைத்தாள்.
அவளது போராட்ட வடிவம் முற்றிலும் வித்தியாசமானது. 2018 ஆகஸ்டு 20 வெள்ளிக்கிழமை முதல் கால நிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம் என்ற வாசகத்துடன் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் அமர்ந்தார். முதலில் அவளை யாரும் கவனிக்கவில்லை. குழப்பத்துடனும் மக்கள் கிரெட்டாவை கடந்து சென்றனர். பின்பு அவளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊடக வெளிச்சம் பட்டது. அந்த நேரம் ஸ்வீடன் தேர்தல். அதனை சரியாக பயன் படுத்தினாள். தேர்தலுக்கு முன் செப்டம்பர் 7 அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது. உலக அளவில் இதற்கான பேரணி, கூடுகை நடைபெற்றது. கிரெட்டாவின் அடுத்த அறிவிப்பு எதிர்காலத்துக்கான வெள்ளிகிழமைகள் fridays for future குழந்தைகள் வெள்ளி கிழமை பள்ளி செல்லா போராட்டம். அதற்கு ஸ்வீடன் மற்றும் உலகளவில் பெரிய வரவேற்ப்பு.

2018 டிசம்பரில் ஐ.நா.வில் பேச அழைப்பு ஐரோப்பாவின் பல பகுதிகள், நியூயார்க் என தொடர் அழைப்பு கிரெட்டாவிற்கு வந்த வண்ணம் இருந்தது. இதற்கு கூட எளிய பயணமுறை, எளிய தங்கும் விடுதியை பயன்படுத்தினாள். டைம் வார இதழ் 2019 ஆம் ஆண்டின் நபராக அறிவித்தன. 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்பது. பருவநிலை காக்க தேவை விருது அல்ல; செயல்பாடே என்று விருதுகளை மறுத்தாள்.
தன்னளவில் தொடங்கிய போராட்டம் , உலகளவில் பேசும் பொருளாக சிறிய கால அளவில் செய்தது அவளது பருவ நிலை குறித்த அச்சம், புரிதலை காட்டுகிறது. எங்களின் எதிர்க் காலத்தை சூரையாட நீங்கள் யார் என உலகத் தலைவர்களை நேரடியாகக் குற்றஞ்சாட்டினார். உண்மை தானே டிரம், மோடி போன்ற தலைவர்களின் காலநிலை குறித்த புரிதல்கள் நிச்சயம் கிரெட்டா போன்றவர்களை கோபபடுத்ததானே செய்யும்.
இன்று கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பினால் உலகமே அழிவை சந்தித்தாலும் அதில் இருந்து மீள முடியும். ஆனால் பருவநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் அழிவுகள் கற்பனை செய்ய முடியாதவை, அதன் பாதிப்புகள் சங்கிலி தொடர் போன்றவை.ஆகையால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கிரெட்டா போன்றவர்களுடன் இனைவதும், நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொள்வதுமே சிறந்த வழியாகும்.
Leave a Reply
View Comments