வெற்றி என்பது ஒரு பெயரையோ, சாதியையோ, பிறப்பையோ சாரந்த விஷயம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு தேவைப்படுவதெல்லாம் கடுமையான முயற்சி மட்டுமே. கிஷோர் சாந்தாபாய் காலே தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் சொன்ன வார்த்தை.
நீங்கள் அவர் சொல்லிய வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை அவருடைய சுயசரிதையின் வாசிப்பின் இறுதியில் உங்களால் உணர முடியும்.
ஒரு துன்பத்தைமட்டுமே அனுபவதிக்கொண்டிருக்கும், ஏமாற்றமே தன்னுடைய வாழ்க்கையாக கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் கண்ணாடிதான் இந்த குலாத்தி தந்தையற்றவன் என்ற சுயசரிதை நூல்.
ஏதேனும் ஓர் இடத்தில் நீங்கள் கண்ணீர் வடிக்காமால் சென்றுவிட முடியாது. எழுத்தில் எந்தவித அலங்காரமும் இல்லாமல் கண் முன்னே காட்சியை வைக்கிறார் எழுத்தாளர் கிஷோர் சாந்தாபாய் காலே.
குழந்தை மூன்று மாத குழந்தை பாலுக்கு அழுகிறது. ஆடிக்கொண்டிருக்கிற அம்மா அடுத்த மணியோசைக்குத்தான் வருவாள். அதுவரை பாட்டியின் தோலில் அழுதுகொண்டே கிடக்கிறான். அவன் அழும் சத்தம் ஆடிக்கொண்டிருக்கும் அம்மாவின் காதில் கேட்கிறது. அவள் ஒவ்வொரு முறையும் தன்னுடைய முகத்தை சிரித்த வாக்கில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே முன்னே செல்ல வேண்டும். அவள் ஒவ்வொரு முறையும் முன்னே பின்னே சென்று வந்தால் ஒவ்வொரு முறையும் பார்ப்பவர்கள் ஒரு ரூபாய் கொடுப்பான்.
தாயின் நிலையை உணருங்கள். குழந்தையின் தவிப்பை அவள் எப்படி சிரித்த முகத்துடன் கடந்து செல்ல முடியும். அவள் என்ன பாடுபட்டிருப்பால் அடுத்த பெல் எப்போது அடிக்கும் என்று ஏங்கும் அவள் உள்ளம், மணி அடித்தவுடன் கட கடவென ஓடிச்சென்று தன் மகனுக்கு பாலூட்ட நினைக்கிறாள் ஆனால் ஆடி கலைப்பு சோர்ந்து விடுகிறாள். அதையும் மீறி குழந்தைக்கு பாலூட்டுகிறாள்.
எப்படியான தவிப்பு இது. நினைத்துப் பாரக்க முடிகிறதா, இந்த தவிப்பு கிஷோர் சாந்தாபாய் காலே மருத்துவர் ஆகும் வரை செல்கிறது என்றால் பாருங்கள்.
ஆண்கள் வேலைக்கு செல்லாமல் பெண்கள் ஆடி சம்பாதிக்கம் பணத்தில் சொகுசாக வாழும் வாக்கையை கொடுப்பவர்கள் தான் குலாத்தி பெண்கள். வீட்டில் வெறுமனே இருந்து கொண்டு வாழ்கிறவர்கள் தான் குலாத்தி ஆண்கள் அதில் தப்பியவன்தான் தந்தையற்றவன்.
சாடங்குகள் எவ்வளவு மோசமானவை என்பதற்கு குலாத்தி பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குகளே உதாரணமாகும். அவர்கள் ஆடும் போது யாரேனும் ஒரு பணக்காரன் அவர்கள் மீது ஆசைப்பட்டால் அவனுக்கு ஒரு சடங்கு நடத்தி அவளுக்கு வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள கொடுத்துவிடுவார்கள்.
குலாத்திச் சமூகத்தின் கன்னிப் பெண்களை விற்கும் சடங்கான “சிரா உட்டனர்ன” என்ற சடங்கு மூலம் பணத்திற்காக விற்கப்படுகின்றனர். வாங்குபரின் வயது இங்கே கணக்கில் கொள்ளுவது இல்லை என்பது அதிலும் கொடுமை. அப்படி வாங்கியவர் எப்போ வேண்டுமென்றாலும் விட்டுவிட்டு சென்றுவிடலாம். சில சமயங்களில் விலை போகாதவர்கள், அல்லது இப்படி சடங்கு செய்யப்பட்டு விட்டுவிட்டு சென்றபின் அவர்களை விபச்சாரத்திற்கு பயன்படுத்தும் கொடுமையும் நடந்தேறும். இது எல்லாம் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுமதியோடு. இப்படியான கொடுமை ஏதோ 10ம் நூற்றாண்டு 13ம் நூற்றாண்டில் நடைபெற்றது இல்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடபெற்றுள்ளது.
அப்படி பெயர் தெரியாத அப்பாவுக்கு பிறந்த கிஷோர் தான் தன்னுடைய அப்பாவின் பெயருக்கு பதிலாக அவனுடைய அம்மாவின் பெயரான சாந்தாபாய் காலே என்று பதிவு செய்துகொண்டான். அதனால் அவன் பட்ட அவமானங்கள் தான் எத்தனை எத்தனை.
தன்னுடைய 23 வயதுக்குள் தான்னை பாதித்த, மறக்க முடியாத சம்பவங்களின் தொகுப்புதான் இந்த நூல். இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
இப்படியா நூலை, வடமாநிலத்தின் விழிம்பு நிலையில் உள்ள ஒரு சமூகத்தினை தமிழக சமூகத்திற்கு அறிமுக செய்து வைத்த கலப்பை பதிப்பகத்திற்கு என்னுடைய நன்றியும் பாராட்டுகளும்.
அற்புதமாக மொழி பெயர்த்துக் கொடுத்த வெ. கோவிந்த சாமி அவர்களுக்கும் எனது நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | குலாத்தி – தந்தையற்றவன் கதை (2026) |
| ஆசிரியர்: | கிஷோர் சாந்தாபாய் காலே (தமிழில் வெ. கோவிந்தசாமி) |
| வெளியீடு: |
கலப்பை பதிப்பகம்
|
| விலை: | ₹.300 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 மொ. பாண்டியராஜன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
