ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

1.

போதி மரங்கள்
தவமிருக்கின்றன
புத்தன்வேண்டி.

2.

விழித்திருக்கிறேன் நான்
தினமும் விடிகிறது
இரவுக்கு.

3.

உடை ஆடம்பரம்
உணவு சாதாரணம்
முக்கியப் பிரமுகர் திருமணம்.

4.

மரம் எதிர்வீட்டில்
தினம் விழும் சருகு
என்வீட்டில்.

5.

முதலில்காக்கை
முடிவில்நாய்
நடுவில் நாங்கள்சாப்பிடுவோம்.

6.

தன் மரணத்திற்கு
தானே ஆடிக்கொண்டு விழுகிறது
மரத்தின் இலை.

7.

விடுதியில் விதவிதமான.உணவு
விம்முகிறது மனம்
அம்மாவின் ரசம் ருசிக்க.

8.

வாங்க முடியாதவற்றை
அம்மா சொல்வாள்
பிடிக்காதென்று.

9.

காத்துக் கிடக்கின்றன
கற்கள்
சிற்பியின் வருகைக்காக.

10.

பூமியின்
கற்பமா?
மலைகள்.

11.

கொய்யாப் பழம் நறுக்கினேன்
கொலைகாரனாக்கியது
இறந்த புழு.

12.

காக்கையை மட்டுமே நானழைப்பேன்
விருந்தினரை
காக்கை அழைத்துக்கொள்ளும்.

13.

சாரல் மழை
மீட்டுக் கொடுத்தது
என் எட்டாம் வகுப்பை.

14.

எதிர் வீட்டு முருங்கை
காய்த்த போது
கண்டெடுத்தேன் என் செருப்பு.

15.

நுகர்ந்தே திருப்தியடைகிறாள்
பூ விற்கும்
பூக்காரி.

16.

பனியை ரசிக்க
பணமெதற்கு?
மார்கழி.

17.

வீட்டைக் காக்க
வாங்கிய நாயை
காவல் காக்கிறான் அவன்.

18.

உயர்வும் தாழ்வும் ஒரேயிடத்தில்
உள்ளே கடவுள்
வெளியே பிச்சைக்காரன்.

19.

பள்ளத்திலேதான் தங்குகிறது
விண்ணிலிருந்து புறப்பட்ட
மழைத்துளி.

20.

ஆயிரம் கவலைகளைத்
தீர்த்து விடும்
ஒரேயொரு கவிதை.

 

எழுதியவர் 

மு. வாசுகி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

5 thoughts on “மு. வாசுகியின் ஹைக்கூ கவிதைகள்”
  1. அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *