1.
புதிய நாட்காட்டி
பார்க்கத் தூண்டி விடும்
விடுமுறை நாட்கள்
2.
தேயிலைச் செடிகள்
பசுமையைப் பேணிக் கொடுக்கும்
காட்டுச் செடிகள்
3.
உரசும் பசு
அன்பை வெளிப்படுத்தும்
தாயிடம் குழந்தை
4.
விற்ற பூக்கள்
இன்னும் மணம் வீசியவாறு
பூக்கூடைகள்
5.
வற்றிய குளம்
நடைபாதையை மறைத்து விடும்
பெய்யும் மழை
6.
வரப்போரத்தில் கொக்கு
தெளிந்த நீரில் தெரிகிறது
பெரிய மீன்
7.
மழைச்சாரல்
புல்வெளியை ஈரப்படுத்துகிறது
குளிர் நிலவு
8.
மழலை முகம்
கவலைகளைப் போக்கிடச்
செய்யும்
அம்மாவின் தாலாட்டு
9.
ஆற்றுப் படுக்கை
குளிர்ச்சியில் சில்லிடும்
மரத்தின் நிழல்
10.
பேருந்தில் பாடகன்
தட்டில் விழும் சில்லறை
பசியின் இசை
எழுதியவர்:
சோ. ஸ்ரீதரன்
இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.