ஹைக்கூ - ஜனநேசன் haiku - jananesan
ஹைக்கூ - ஜனநேசன் haiku - jananesan

ஹைக்கூ – ஜனநேசன்

குளமும் இல்லை 
தவளையும்  இல்லை 
தாவி  அலைவுறும்  மனது.

             +++

நீ வந்ததும் எழுச்சி 
மறைவதும்  நெகிழ்ச்சி 
சூரியனே …

             +++

மொட்டைமாடியில்  பறக்கும் கொடிகள் 
சுரையும், பூசணியுமாக 
குடிசையைக் காத்த நன்றி…! 

              +++

பூத்தது அழகு 
உதிர்ந்து கிடப்பதும்  அழகு !
மஞ்சள் கொன்றையே ..!

             +++

மாறின இறக்கைகள் 
இரு கைகளாக ..
மாறவில்லை பறக்கும் மனம் !

              +++

வளைந்து  நெளிந்து நின்று 
உயிர் வாழும் ..
மரமும் ..!

            +++

தாயிழந்தவருக்கு  தாய் !
காலமறிந்து ஊட்டும் 
கனிமரங்கள் !

              +++

புழுங்கும்  மீன்களுக்கு 
விசிறிடும்..
பனையோலை நிழல் !

               +++

வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும் 
 ஓவியங்களாக ..

கான்கிரீட் பூங்கா !

               +++      

கலைத்திடாதே காலைக்காற்றே ..
இலைகளில் ,பூக்களில் 
விளைந்த முத்துக்களை ..! 

                 +++

அவர்கள் சோர்ந்து  இறங்குகிறார்கள் ..
இவர்கள்  மகிழ்ந்து  ஏறுகிறார்கள் ..
நகரும்படிகட்டுகள்  நவிலும்  வாழ்வியல் !

                 +++  

இறந்தபாம்பாக   நதி..!
ஊர்ந்திடும்  பாம்புகளாக  சாலைகள் 
விமானத்துப் பார்வையில்  !

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *