ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா
1.சிறகு கோதும் பறவை
கல்லடிப்பட்டு விழுகிறது
கனிந்த பழம்
2. மீன் கொத்தும் நாரை
சிதறிய நீர்த்துளியிலிருந்து
உடைந்திணையும் வானம்
3. முன்னோக்கி நடக்கம் மாணவன்
திரும்பி பார்க்க வைத்தது
காற்று துரத்தியக் குடை
4. மழை தங்கிய மொட்டைமாடி
சதுரமாகிப் போனது
மேகங்களோடு வானம்
5. முற்றத்தில் தானியக்கதிர்
கவனிக்காது பறக்கும் குருவிவாயில்
நெளியும் புழு
6. பட்டாம்பூச்சி துரத்தும் சிறுமி
பின் தொடரும் தாத்தா
திசை மாற்றும் சிறுதூறல்
7.குயிலின் பாடல்
சட்டென நிறுத்தியது
டொக்.. டொக்.. மரங்கொத்தி
8.புளியமரத்தை உலுக்குகையில்
கொட்டிக்கொண்டே இருக்கின்றன
அவரவர் சொற்கள்
9.கால்கள் கட்டப்பட்ட மாடு
லாடம் அடிக்கையில் பதறும்
குழந்தையின் மனசு
10.புலரும் பொழுது
புறப்படும் பறவைகள்
உதிரவே இல்லை இலைகள்
எழுதியவர் :
கன்னிக்கோவில் இராஜா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான கவிதைகள் தோழர்