ஞா. ஆனந்தனின் ஹைக்கூ கவிதை
- என்னுடைய தடைகளை உடைத்தெறிய
எந்த படைகளும் தேவையில்லை
தைரியம்
- ஏறுவதும் ஏணிகளால்
இறங்குவதும் ஏணிகளால்
செயல்கள்
- பகலின் தொடக்கம், இரவின் முடிவில்
பகலின் முடிவில், இரவின் தொடக்கம்
காலம்
- நீ மீண்டு(ம்) வருவாயா…
எங்களை மீள செய்வாயா…
நீட் தேர்வு 2024..
- உன் பெயர் உடல் , என் பெயர் மூச்சிக்காற்று
இந்த பெயர் யாருடையது ?
ஜா…தி !!
- நியூட்டன் விதி மீண்டும் நிரூபணம்….
கடவுளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது….
கோவில் (மசூதி).
எழுதியவர் :
ஞா . ஆனந்தன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

