அய்யனார் ஈடாடி ஹைக்கூ
1
பூக்கூடையில்
அப்பாவின் முகந்தெரிந்தது
சிரிக்கும் மலர்களில்.
2
வேப்பம் பூக்கள்
தலையை நனைத்தன
தெக்கத்திக் காற்று.
3
ஓலைக் காற்றாடியில்
ஊர்ச் சுற்றி வந்தான்
உறங்கும் நந்தவனம்.
4
நிர்வாணமாகத் தொங்குகிறது
தோலுரிக்கப்பட்ட ஆடு
ஆடை தரிக்கும் கத்தி.
5
தண்ணீர்த் தொட்டிக்குள்ளிருந்து
தலை நீட்டுகிறது
அரசங்கன்றொன்று.
6
குவளைத் தண்ணீரைப்
பருகும் மஞ்சள் நிலா
எலுமிச்சை ரசம்.
7
கடலிட்ட எச்சத்தின்
வெள்ளைப் பூக்கள்
உப்புப் படலம்.
8
கிடாரிக் கன்றின்
பசியாற்றிப் போகிறது
தொத்தல் மாடு.
9
முச்சந்தியில் உடைந்து கிடந்தது
குயவர் வீட்டு மண்குடம்
கண்ணீர் விடும் செம்மண் சாலை.
10
கண்ணாடிப் பலூன்களில்
இரவின் மின்மினி
தலைப் பிரசவம்.
11
குளத்து மேடு
உடுத்திப் பார்த்தது
கந்தல் துணிகளை.
12
பருத்திக் காடுகளின்
தலை தொங்கியது
வானிலை மாற்றம்.
எழுதியவர்
– அய்யனார் ஈடாடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான கவிதை மென் மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹