ஹைக்கூ | Haiku |செ. தமிழ்ராஜ் - C Tamilraj

ஹைக்கூ மாதம் – “செ. தமிழ்ராஜின் ஹைக்கூ முத்துக்கள்”

1. 

இரை விழுங்கிய கொக்கை
ருசி பார்க்கின்றது
மரணம்

2.

பெருந்தாகமெடுத்து
அலையாடுங்கடல்
நிலவைப் பருகுகிறது

 

3.

பறவையின் காலிடுக்கில்
சிக்கிய இரையொன்று
வேடனைத் தேடுகின்றது

 

4.

தலைகீழாய்
நீரிலாடுகிறது பனை
காட்சிப் பிழை

 

5.

குயவன்
வனையும் பானையில்
உறைகிறது காலம்

 

6.

இறகாலான படகொன்று
நதியில் உலவினால்
எடையிழந்த காற்றொன்று பயணிக்கும்

 

7.

வெளிச்சமேந்தி காத்திருக்கிறாள்
படகு கரையேறுகிறது
இருளேந்தி

 

8.

மாடக்குழியில்வைத்த சுடர்
காரிருளின்முகத்திலெல்லாம்
ஒளி பூசி மகிழ்கிறது

 

9.

மூக்குத்தியின் வாழிடங்களில்
மலர்கள் சொருகி உலர்கிறாள்
ஏழையொருத்தி

10.

முடமான சித்திரக்காரரொருவர்
சாலையோரம் முருகனை வரைந்து
பாதங்களை வருடுகிறார்

 

எழுதியவர் 

செ. தமிழ்ராஜ்

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. பொன் விக்ரம்

    பத்தும் முத்தென்று சொல்லலாம் .
    பறவையின் காலடிக்கில் சிக்கிய இரையொன்று வேடனைத் தேடுகிறது
    சிறப்பு

    • ஆ. தமிழ்மலர்

      அனைத்துக்
      கவிதைகளையும் அழகாக
      வடித்தெடுத்திருக்கிறார்
      கவிஞர்.
      இவை அனைத்தும்
      கவிதையல்ல
      விதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *