வசந்த காலம்
பூ மரத்தை அசைத்தேன்
வெண் கொக்குகள் பறந்தன
….
நீர் பாய்ச்சும் வயல்
மடை மாற்றும் முன்
புருவத்தைத் திருத்தினேன்
….
முட்டப் பார்க்கும்
மேய்ச்சல் மாடு
பனித்துளியில் தெரியும் முகம்
..
மழைநீரைப் பருகினேன்
குளிர்ச்சியாய் மலர்ந்திருந்தன
பூக்கள்
….
இருளாகும் பொழுது
கோபம்
பசித்த மீன்கொத்திக்கு
…..
எனக்கு முன்
ஒரு தவளை
தத்தித் தத்திக் கடந்து போனது
….
ஒத்தையா விட கூடாதென
ரெட்டை ரோஜாக்களாய்
செடியில் விடும் அம்மா
…..
மலைக்கு பின் செல்ல
எட்டிப் பார்க்கிறது
வெயில்
…..
கீழே கிடந்த தொப்பி
வேலிக்கல் மீது வைக்கிறார்
எல்லை வீரர்
எழுதியவர்
க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

