1.
தேர்தல் தேதி அறிவிப்பு
இன்னும் கிடப்பில் கிடக்கிறது
முந்தைய வாக்குறுதிகள்
2.
வாக்கு எந்திரங்கள் மீதுள்ள சந்தேகம்
அதிகரித்து கொண்டேயிருக்கிறது
அறிவியல் தொழில்நுட்பம்
3.
விரிவடையும் சாலையோரம்
புதிதாய் துளிர்விடுகிறது
பிடுங்கப்பட்ட மரங்களின் வாரிசுகள்
4.
டெபாசிட் இழந்த தலைவர்
கம்பீரமாய் இருக்கிறார்
தேர்தல் சுவரொட்டியில்
5.
ஒரு வழிப்பாதையில்
காவல்துறை அனுமதி
கோவில் தேர்
6.
வெங்காய வியாபாரி
அரசியல்வாதியோடு நேரடிப் போட்டி
தெருத்தெருவாய் கூவுகிறார்
7.
ஆற்றங்கரையில்
அமோகமாய் விற்பனையாகிறது
சுத்திகரிக்கப்பட்ட நீர்
8.
நெடுஞ்சாலை எங்கும்
கடுமையாய் அலைகிறது
கனிமவள சுமையுந்துகள்
9.
வங்கியில் எடுத்த பணம்
வழியில் பிடுங்கிச் சென்றது
தேர்தல் பறக்கும்படை
10.
கோவில் குடமுழக்கு
யாருக்கு முதல் மரியாதை
குழப்பத்தில் கடவுள்
எழுதியவர்

கோவை ஆனந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

