எல்லா இடங்களும் வறட்சி
எங்கு விதைப்பது…
மனித நேயத்தை!
இரவு பகல் பார்ப்பதில்லை
பட்டினி கிடக்கும்
வயிறு!
பிறந்தவுடன் இறந்து விடுகிறது
போலி மனிதர்கள்
மீதான நம்பிக்கை!
விடுமுறை நாளில் தூசு
தட்டப்படுகிறது
பழைய நினைவுகள்!
பட்டினி கிடந்த இரவு
வயிற்றை நிரப்புகிறது..
அம்மாவின் தாலாட்டு!
எழுதியவர்
மு.முபாரக்
தேனி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

