ஹைக்கூ -மு.முருகேஷ்  | Haiku - Murugesh Mu

 

0
செல்பேசியில் மழலைக்குரல்
சட்டென அமைதியானது
தோட்டத்துச் சிள்வண்டு.

 

0

சிக்கிக்கொண்டது பட்டம்
வேகமாய் இழுக்கையில்
கூடவே வருகிறது ஒற்றைப்பூ.

0

கோழியின் றெக்கைகள்
அகலமாய் விரிந்தன
பதுங்கும் குஞ்சுகள்.

 

0

கதவிடுக்கில் உற்றுப்பார்க்கும்
இரண்டு கண்களிலும்
மஞ்சள் நிறம்.

 

0
வீசியெறிந்த தானியங்கள்
கொத்தித் தின்னும் புறாக்கள்
வலைக்குள் கால்கள்.

0
பேருந்துப் பயணம்
இறங்கவிடவில்லை
சன்னலோரத் தூக்கம்.

 

0
நின்றெரியும் சுடர்

போகும் பக்கமெல்லாம்
இழுத்துச்செல்லும் காற்று.

 

0

மேடையில் குவிந்திருக்கும்
பிரம்மாண்டமான வெளிச்சம்
அரங்கம் முழுக்க அடர்ந்த இருள்.

 

0
புல்வெளிக்குள்
வெறுங்காலால் நடந்தேன்
எத்தனையெத்தனை பனிமுத்தங்கள்.

 

0

குளக்கரையில் கொக்கு
மிரட்சியோடு பார்க்கிறது
செத்து மிதக்கும் மீன்களை.

 

0
பூங்காவிற்குள் நுழைகையில்
தோளுரசிப் போகின்றன
இணைந்த பட்டாம்பூச்சிகள்.

 

0

இரயில் பயணம்
பாலத்திலிருந்து பறக்கிறது
காலியான பாலித்தீன் பை.

 

0

தொடர் மழை நாள்கள்
கழட்டி வைத்த காலணிக்குள்
இரு குட்டித் தவளைகள்.

 

0
பழக்கடையைச் சுற்றி வந்தேன்
காணவேயில்லை
ஒரு தேனீயைக்கூட.

 

எழுதியவர் 

பால சாகித்திய புரஸ்கார் விருது – கவிஞர் மு.முருகேஷ் | குவிகம் குழுமம் - குவிகம் மின்னிதழ்

 

 

 

 

 

 

 

 

 

மு.முருகேஷ்

 

 

 

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *