ஹைக்கூ | Election Haiku | பெரணமல்லூர் சேகரன் - N Sekar

ஹைக்கூ மாதம்…..

சென்ரியு கவிதைகள்

 

*
நிலையிலா அரசியல்
கலையான குதிரை பேரம்
விலைபோன உறுப்பினர்கள்

 

*
விதி வலியது
சதி பரப்புவது
மதி வாழ்விழப்பது

 

*
ஒளிரும் நிலவு
வளர்பிறை தேய்பிறை
அறிவியலுக்கு எதிர்மறை

 

*
இரட்டைக் குவளை
தேநீர்க்கடை திட்டம்
ஏட்டில் சட்டம்

 

*
பருவநிலை மாநாடு
முடிவுகள் அமுலாக்காததால் கேடு
உபதேசிக்கும் நாடு

 

*
ஆணைய கண்காணிப்பில் தூய்மை
தேர்தலில் நேர்மை
கிடைக்கும் வாய்மை

 

*
மரம் தாவல்
குரங்குக்கு ஆவல்
விஞ்சுதல் கட்சித் தாவல்

 

*
நதிகளைப் பொதுவாக்கலில்
நங்கூரமிடுகிறது
நதி நீர் தீர்வு

 

*
விடியாத வாழ்வு
முடிகிறது
விடிந்ததும் குடித்தலில்

 

*
இயற்கைக் கொடை
அழித்தல் தடை
சுற்றுச் சூழலுக்கு விடை

 

எழுதியவர் 

பெரணமல்லூர் சேகரன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *