ஹைக்கூ -ந க துறைவன்  | Haiku - ngthuraivan

1.

வெட்டுக் கிளிகளை விரட்டு
பால் விடும் கதிர்களை அழிக்கின்றன
மெல்ல பறக்கிறது வெள்ளைக் கொடி.

 

2.
சரக்கொன்றைப்பூக்கள்
மஞ்சள் நிற விரிப்பில்
நடை பயிலும் குருவிகள்.

 

3.
என்னவொரு வக்ரபுத்தி
உளவு பார்க்கும் டிரோன் தும்பிகள்
மனிதநேயமற்ற உறவுகள்.

 

4.
பிங்க் நிற பெட்ஷீட்டில்
ஒட்டக ஓவியம்
தூக்கத்தில் பயணம்.

 

5.
தெரு முழுவதும் விளையாட்டு
வண்ண வண்ண நிறங்களில்
குட்டிக் குட்டி நாய்கள்.

 

6.
பென்சிலால் கிறுக்கப்பட்ட எழுத்துக்கள்
சுவர் சித்திரங்களாய்
குழந்தைகள் விளையாட்டு

 

7.

குளிர்காலப் பனி நீர்த்துளிகள்
குடிசையோலையில் ஊர்கிறது
மரவட்டைப்பூச்சி

 

8.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினான்
நெஞ்சில் பாய்ந்து துளைக்கிறது
கவலை அம்புகள் தினமும்.

 

9.
அருள் வந்தாடிய கோணங்கியிடம்
வரங் கேட்டார்கள்
சுருட்டும் சாராயமும் காணிக்கை.

 

10.
பார்க்க இனிது கேட்க இனிது
குயில் பேச்சும்
குழந்தைப் பேச்சும்.

 

11.
மேசைமேல் சூடான தேனீர்
தொடர்ப்பேச்சில் மெய்மறந்து
ஆறுதலான பேச்சுகள்.

 

12.
பறவைகள் கவனம்
ஆலமரத்தின் கீழ் பிணைந்து
நாகதேவதைகள் மௌனம்.

 

13.
இலைகளுக்கும் பூக்களுக்கும்
இடையில் மௌனமாய்
எங்கோ வேடிக்கை பார்க்கும் குருவி.

 

14.
எனக்கு எதுவுமே தெரியாது
தெரிந்ததெல்லாம் இப்பொழுது
தெரியாமல் போனது.

 

15.
மகிழ்ச்சி எப்போதோ வருகிறது
தேடித் தேடி வருகிறது
துக்கம் மட்டும் எப்பொழுதும். …

 

16.
இருட்டில் வேர்கள்
வெளிச்சத்தில் பூக்கள்
நாசி நுகரும் நறுமணம்.

 

17.
வெகு தொலைவிருந்து கேட்கிறது
பறவையின் குரல்
வெளியெங்கும் நிசப்தம்

 

18.
மசூதி, தேவாலயம்,
இந்துக் கோயில்கள்
பேத மற்றுப் புறாக்கள்

 

19.
புதுப்பிக்க வசதியற்று
நொய்ந்துக் கிடக்கிறது
கயிற்றுக் கட்டில்.

எழுதியவர் 

ந க துறைவன் 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *