குறுங் கவிதைகள்
1.
எல்லாம் தொலைத்த பிறகும்
தொலைந்து கடப்பது
வாழ்க்கை
2.
உளி படாத கல்
சிலையாவதில்லை
வலி படாத காதல்
வரலாறாவதில்லை !
3.
ஓடும் நதி
ஒருபோதும்
தன் உழைப்பைப்
பேசுவதில்லை !
4.
குடிப்பழக்கம்
சுடுகாடு வரை உணரவில்லை
ஐந்தறிவு மனிதன்
5.
படிப்பினை
பூட்டி வைக்கிறது
சிறைக் கதவுகளை!
எழுதியவர்
லி .நௌஷாத் கான்
கும்பகோணம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

