1
கோவில் தானியங்கி இசை,
மங்களத்தை விரட்ட
கடவுள் தேடிக்கொண்டு…
2
பிற்பகலுக்குப் பிறகும்
நம்பிக்கையுடன் தொங்குகிறது,
ஏதோ ஒரு பிணத்துக்கு வாக்கப்பட்டு
பிய்த்தெறியப்படும் சாபத்துடன்
பூமாலை.
3
திருட்டு ரயில்
பயணச்சீட்டுக்கு
கழிவறையில் தண்ணீர் இல்லை.
இருக்கையில் திருட்டுப் பயணி.
4
அமங்கல
கொட்டுக்கார சிறுவனின்
குத்தாட்ட லாவகம்,
எல்லோரிலும் தொற்றும் மங்களம்
எழுதியவர்
ஒட்டடை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

