ஹைக்கூ -ராஜூ ஆரோக்கியசாமி  | Haiku - Raju arockiasamy

1
மறையும் சூரியன்
வெளிச்சத்தைத் திருடிச் செல்கிறது
மலைகளுக்கிடையே மாலை

 

2
தங்கக் கதிர்கள்
அன்பாக உலகத்தை அரவணைக்கிறது
மெதுவாய் மலரும் மாலை

 

3
நீளும் நிழல்கள்
காற்றை நிரப்பும் அந்தியின் அழகில்
சூரியனின் பிரியாவிடை

 

 

4
குளிர்ந்த காற்று
மரங்கள் வழியாக சலசலக்கிறது
அந்தியின் அழகு

 

5
மாலை வானம்
மேகக் கூடலில் புதிது புதிதாய்
சிதறும் சிற்பங்கள்

 

6
மூடுபனி அடிவானம்
நிறங்களின் இணக்கமான உயிர்ப்பில்
நம்பிக்கையூட்டும் சூரிய உதயம்

7
கருஞ்சிவப்பு வானத்தில் கோடுகள்
இருளைத் தொலைக்கும் சூரியனால்
விழித்தெழும் விடியல்

8
பட்டாம் பூச்சிகள்
பூவின் காம்புகளில் நடனமாட
இயற்கையின் தாலாட்டு

 

9
தெள்ளத் தெளிவாக நீர்
அள்ளிப் பருகுகையில் சுவாசமெங்கும்
மூலிகை வாசம்

 

10

உந்தும் சிறு கால்கள்
தவளை குளத்தில் தாவிக் குதிக்கையில்
தெறிக்கும் நம்பிக்கை

 

எழுதியவர் 

ராஜூ ஆரோக்கியசாமி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “ஹைக்கூ மாதம் – “ராஜூ ஆரோக்கியசாமி ஹைக்கூ கவிதைகள் “”
  1. சர்வதேச ஹைக்கூ தினத்தில் எனது கவிதைகளையும் வெளியிட்டு பெருமை படுத்திய ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சம் நிறை வணக்கங்கள்!

    # ராஜூ ஆரோக்கியசாமி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *