ஹைக்கூ -சா.சமீமா சிரின்  | Haiku - Sameema Sirin.S

1.

அடிக்கடி நனைந்துவிடுகிறது
ஆழ்துளைக் கிணறு
தவறி விழுந்த பிஞ்சுகளின் கண்ணீரில்

2.

கரைகிறது
ஐஸ் விற்பவனின் மனம்
மழைக்காலத்தில்

 

3.

மனித இனத்தைப் பார்த்து
ஆவேசமாய்க் கத்தியது
குப்பையில் குழந்தை கண்ட நாய்

 

4.

அலைகளை ரசித்ததில்லை
படகைத் தேடும்
மீனவனின் மனைவி

 

5.

அனைவராலும் ரசிக்கப்படும்
முதல் விதவை
நிலவு

 

6.

அடிக்கல் நாட்டு விழா
புலப்படாத பங்கேற்பாளர்களாய்
ஊழல்

 

 

7.

களை கட்டுகிறது திருமண ஏற்பாடு
அடகுக் கடையில்
அப்பா

 

8.

மகனின் வயோதிக காலத்தை
எண்ணிக் கலங்குகிறார்
முதியோர் இல்லத்தில் வசிக்கும் அம்மா

 

9.

ஓட்டுக்குப் பணம் வாங்கினேன்
ஜனநாயகத்தைப் பற்றி எப்படி எடுத்துரைப்பது ?
என் ஒட்டிய வயிறுகளிடம்

 

10.

போகிப் பண்டிகை
எரியூட்ட ஏதுமின்றி
ஏழைகள்

 

எழுதியது 

-சா.சமீமா சிரின்
செய்யது அம்மாள் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *