1.
பொய் சொல்ல சொல்கிறார்கள்
நீதிமன்றத்தில் மனு
வருத்தத்துடன் ஒலிபெருக்கி
2.
நான்கடுக்குப் பாதுகாப்பு
பூரித்து மகிழ்ந்தது
ஓட்டுப் பெட்டி
3.
ஓங்கிய கைகள்
பணிந்து தொடர்ந்து கும்பிடுகிறது
ஒட்டுவேட்டை
4.
தேர்தல் ஏற்பாடுகள்
முழு வெற்றி
டாஸ்மார்க் விற்பனை
5.
இலவசங்கள் அறிவிப்புகள்
அதிகரிக்கிறது தினமும்
தேர்தல்
6.
வெட்கப்பட்டு தலை குனிகிறது
பொய் பிரச்சாரத்தால்
ஒலிபெருக்கி.
எழுதியவர்
கவித்தென்றல் பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

