ஹைக்கூ - வ.சு.வசந்தா | Haiku - Vasantha Swaminathan

ஹைக்கூ மாதம் – “வ.சு.வசந்தாவின் ஹைக்கூ முத்துக்கள் “

1.

சிறகுகளை அடித்து
நீரை நீக்கியது குருவி
சாரல் மழை

 

2.

தோளில் ஏறி
கும்பிடு
சாமி ஊர்வலம்

 

3.

நீந்திப் பிடித்து
விளையாடுகின்றன
துரத்தி ஓடும் மீன்கள்

 

4.

முனீஸ்வரனா
கொள்ளிவாய் பிசாசா
தூரத்து வெளிச்சம்

 

5.

நரிக்கு நாட்டாமை
கொடுத்தது யார்
தானே எடுத்துக் கொண்டது

 

6.

பந்து எகிறியது
பையனும் தான்
அடிப்பட்டது பையனுக்கு

 

7.

கெளுத்தியும் கெண்டையும்
பேசிக்கொண்டன
யாரைப் பிடிப்பார்கள்

 

8.

வலை மீன் விலையாகும்
கருவாடும்
விலை போகும்

 

9.

சாய்ந்த கோபுரம்
எதனால்
பைசாவால்

 

10.

நின்று நிதானித்து
வெடிக்கிறது
நெருப்பு கங்கு.

 

எழுதியவர் 

வ.சு.வசந்தா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *