1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.
2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி
3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்
4)
சுடுகாட்டுப் பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.
5)
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

