#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்
#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி
#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு
#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்
#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி
#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்
#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி
#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை
#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உப்புமா ..ஹைக்கூ
நுட்பமான சிந்தனை !
அணைத்தும் அழகு !
அனைத்தும் அருமை…
ராணிக்கு மட்டும் முழு சுகந்திரம் சதுரங்கத்தில் .சிறப்பான கவிதை
உப்புமா ஹைக்கூ அருமை.
ராணியின் சுதந்திரம் பற்றிய கவிதை அருமையான கவிதை
பெயரில் ராணி…
வாழ்வில் குழந்தைகளை
கரை சேர்க்கும் தோணி
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
அற்புதமான வரிகள் தோழரே….
நுட்பமான சிந்தனை !
அணைத்தும் அழகு !
R.S,BALAKUMAR.M.A.,
CONTENT WRITER/FACEBOOK.COM/WHATSAPP–9283182955
துளிப்பா-கவிதைகள்
அனைத்தும் அருமையாக இருக்கிறது .என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகட்டும் .தொடரட்டும் உமது துளிப்பாக் கவிதைப்பயணம்.
கவிக்கோ .இரா .சீ ,பாலகுமார்,M .A .,
கடுகுக்குள் ஒரு கடல் துளிப்பா நூலில் 50துளிப்பாக்கள் அச்சிட்டு வெளியாகிஉள்ளது. /முகநூல் எழுத்தாளர் /ஊடகவியல் சங்க உறுப்பினர் /தமிழ் நெஞ்சம் /முத்துக்கமலம் /தங்கமங்கை/இனிய நந்தவனம் துளிப்பா/கட்டுரையாளர் .
உப்பு மா அருமையான சிந்தனை