1.
தாகம் தணியல
ஆத்து தண்ணிய தார வார்த்தது
குளிர்பானம்.
2.
இயற்கையைக்
காக்க மறந்த மனிதன்
உணர்ந்தான் அனல் காற்றை.
3.
ஊரெங்கும் மாடி வீடு
தெருவெங்கும் விளக்கு வெளிச்சம்
கூடிப் பேசுவதற்கு ஆள் இல்லை.
4.
அம்மாவுக்கு
தொந்தரவிலிருந்து விடுதலை
மழலையின் கைகளில் அலைபேசி.
5.
காற்று வாசம் அற்றுப்போனது
உடலோடு பின்னிப் பிணைந்த
ஆடையால்.
6.
ஓட்டுக்குப் பணம்
சிந்திக்காத மக்களால் நடந்தது
தேர்தல் திருவிழா.
7.
தூய்மையான நீருக்கு
விலை
மினரல் வாட்டர்.
8.
பேருந்தில் பயணம்
பேசாத மக்கள்
அலைபேசியில் கண்கள்
எழுதியவர்
ஆறுமுகம் கணேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.