-
அசுத்தங்களை நீக்கி
நாட்டையே சுத்திகரித்தது
புயல்
- தினமும் என்னை
இருவேளையும் சுவைக்கிறது
தேனீர்
- யாருடைய மனுவையும்
பரிசீலிக்க வில்லை
மரணம்.
- கிணற்று நீரில்
ஊஞ்சலாடியது
நிலா.
- அதிகாலை ஜன்னலில் பாடும்
பறவை
தாயின் தோளில்உயிருடன்
பூமாலை
மழலை.
- ஆகாயத்தைத் தொட
ஆசைப்படும்
பறவைகள்.
- விவசாயி ஓய்வெடுக்கிறார்
இயற்கைப் பந்தல்
மர நிழல்
-
கொதிக்கும்
எரிமலைக் குழம்பு
படித்த வயிறு.
- குவளையில் மொண்டு
ஊற்றினாள்
வீட்டில் நுழைந்த மழை.
எழுதியவர்
அ. ஷம்ஷாத்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ARUMAI
அதிகாலையில் பாடும் பறவை…..
மற்றும்
தினமும் இருவேளை என்னை சுவைக்கிறது,….
ஆகிய இரு கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
வாழ்த்துகள் தோழர் 💐💐💐