-
சூரிய கிரகணம்
——————————
கருப்புக் கல் வைத்த
மோதிரம் போட்டுக்கொள்கிறது,
வானம்.
- பனைமரம்
——————–
கோடையில்
நுங்கு குலைகளாக,
கொட்டிக் கொடுக்கிறது பனை.
- பெளர்ணமி ஒளியிலும்
இருண்டு கிடக்கிறது,
பொய்யர்களின் உள்ளம் .
- சலவைத் தொழிலாளி
தோற்றுப் போகிறார்,
ஊழல்வாதியின் கறை.
- மழையில் குளிர்ந்து போகிறது
விவசாயினுடைய,
மனது.
- வலிக்கிறதென
சொன்னதில்லை,
கைகாட்டி மரம்.
- தங்க நகை
வியாபாரி சிரிக்கிறார்,
பொன்னாக.
எழுதியவர்
ஆ.சார்லஸ்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

