1.
காட்டாற்றில் தப்பித்த
கெண்டைக் குஞ்சுகள்
உன் கண்கள்
2.
கூட்டை விட்டு தாண்டா
பட்டாம்பூச்சிகள்
உன் இமைகள்
3.
மூன்றாம் பிறையல்ல
நான்காம் பிறை
உன் நெற்றி
4.
பிரிட்ஜிலிருந்து எடுத்த
கமலா ஆரஞ்சுகள்
உன் கன்னங்கள்
5.
மஞ்சள் நிறத்து
எள்ளுப்பூ
உன் நாசி
6.
ரோஸ் மில்க்கில் ஊறிய
ஆரஞ்சு சுளைகள்
உன் இதழ்கள்
7.
சாமந்தியில் குளித்த
சம்பங்கிப் பூக்கள்
உன் விரல்கள்
8.
வெட்சிப் பூக்கள்
கொய்து சமைத்தவை
உன் நெஞ்சங்கள்
9.
வெயில் படாத
பிஞ்சு மேகங்கள்
உன் பாதங்கள்
எழுதியவர்
– தினேஷ் பாரதி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.