Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

1.

பரந்த குளம்
இலையளவே இருக்கிறது
எறும்பின் எல்லை

2.

பெரிய காடு
குச்சியுடன் திரும்புகிறது
கூடிழந்த பறவை

3.

கோடை வெயில்
நாயுடன் விளையாடுகிறது
கார்மேக நிழல்

4.

உயர்ந்த ஆலமரம்
விழுதைப்பற்றி இறங்குகிறது
விழுந்த மழை

5.

அடிவாங்கிய ஆணி
பால் தருகிறது
பசு மரம்

6.

கன மழை
உதறி விட்டு பறக்கிறது
நனைந்த பறவை

7.

சலசலக்கும் நீரோடை
அமைதியாக இருக்கிறது
ஆழ்கடல்

8.

பட்ட மரம்
அருகே வந்து போகிறது
வளர்பிறை

9.

வீசுகிறது காற்று
தலைவாரிக் கொள்கின்றன
வரிசையாக நாற்றுகள்

10.

பௌர்ணமி வெளிச்சம்
நிறம்மாறி விடுகிறது
நிலவை கடக்கும் கிளி.

 

எழுதியவர் 

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



One thought on “ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *