Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

 

1.கோடை வெயில்
நாயுடன் விளையாடுகிறது
கார்மேக நிழல்

2.பூ உதிரும் போதெல்லாம்
ஆடுகிறது கிளை
ஊஞ்சலில் சிறுமி

3.நிலைக்கண்ணாடி
நிழலை ரசிக்கிறான்
நிஜ மனிதன்

4.பரபரப்பாக சமையலறை
அம்மாவுக்கு உதவுகிறது
தூங்கும் குழந்தை

5.அலைபேசி கோபுரம்
காற்றடித்தால் உதிர்கிறது
பழைய குருவிக்கூடு

6.சிவப்பு ரோஜாவின் அழகு
தழுவிய படி கிடக்கும்
வெண்பனி கூட்டம்

7.உயிரோடு இருப்பவர்கள்
சூழ்ந்திருந்து அழுகிறார்கள்
புன்னகைக்கிறது பிணம்

8.குழந்தை அழும் சப்தம்
சன்னலைத் திறந்த காற்று
எட்டிப் பார்க்கிறது நிலவு

 

எழுதியவர் 

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *