1.
காலியானது கூடை
நிரம்பி வழிகிறது
பூக்காரி சிறுமியிடம் புன்னகை
2.
விற்பவர் வாசிக்கிறார்
வாங்கியவர் தடுமாறுகிறார்
ஒரே புல்லாங்குழல்
3.
செடிகள் விற்கப்படும்
விளம்பரம் தொங்குகிறது
பட்ட மரத்தில்
4.
கைம்பெண்
புதுவாழ்வு தருகிறது
பூக்கடை
5.
அமைதியாய் பூனை
பானைகளில் உருள்கிறது
பசியின் சப்தம்
6.
படகில் ஏறியதும்
மெல்ல அசைகிறது
மிதக்கும் தெரு
7.
உயர்ந்த ஆலமரம்
விழுதைப் பற்றி இறங்குகிறது
விழுந்த மழை
8.
சலசலக்கும் நீரோடை
அமைதியாக இருக்கிறது
ஆழ்கடல்
9.
கொட்டுகிறது மழை
கூட்டில் பதுங்குகின்றன
தேனீக்கள்
10.
இருளில் மனிதர்கள்
பிரிவினை பார்ப்பதில்லை
ஒளிரும் நிலவு..
எழுதியவர்
ஐ.தர்மசிங்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

