-
அமாவாசை இரவு
தெளிவாகத் தெரியும்
வானில் விண்மீன்கள் -
பூர்வஜென்ம பந்தமோ?
மரத்தின் கிளைக்குப் பறந்து
சொருகியது கடுதாசி -
காத்திருக்கும் கொக்கு
இழுத்துச் செல்கிறது
பிம்பத்தை நதி - மழைக்காலம்
இனிக் கொண்டாட்டம்தான்
வறண்டநதிக்கு
தினமும் நாய்க்குட்டிக்கு
சோறு போடுவதால்
தாயாகிறான் தெருயாசகன்
- இரவில் தனிமை
தொல்லை தருகின்றன
நினைவுகள் - சூழும் உறக்கம்
விழப்பார்க்கிறது
ஏந்திய புத்தகம் - ஏதிலி வாழ்க்கை
ஏழை எண்ணுவதற்கு
வானத்தில் வெள்ளிகள் - நெடுநாள் ஓட்டம்
ஓயாமல்
அடுக்களையில் அம்மா - தட்டிக்கொண்டே இருக்கிறது
ஜன்னலோரம்
சாரலுடன் காற்று -
பாதத்தில் வீழ்ந்து கிடக்க
விடுவதாக இல்லை
பழுத்தவிலையைக் காற்று
எழுதியவர்
Dr ஜலீலா முஸம்மில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.