1.
பொருள்வயின் பிரியும் பாலையில்
இளைப்பாறும் வல்லூறுகள்.
மணலைக் கடக்கிறது வெயில்.
2.
கிளையில் மோதி விழுகிறது.
பறந்துகொண்டிருந்த
கூதிர்காலப் பனி.
3.
இருட்டிற்குள் எல்லாமும்
வெளிச்சமாய்த் தெரிகிறது.
தண்ணீர்க் குழிகளில் நிலவு.
4.
வந்து சேர்ந்த பறவை
தூது அனுப்புகிறது.
காற்றில் பறக்கும் களைத்த சிறகு.
5.
தனியாய்க் கிடக்கும்
பாதையின் ஒரம் தீப்பற்றி எரிகிறது.
செங்கொன்றை மரம்.
எழுதியவர்:
ஜனமித்திரன்.
2/494-M.மீனாட்சி 3 வது தெரு.
பத்மா நகர். வண்டியூர்.
மதுரை.625 020.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.