Haiku Poems by Jerosha | மு.ஜெரோஷா ஹைக்கூ கவிதைகள்

மு.ஜெரோஷா ஹைக்கூ கவிதைகள்

1.

இறந்த பின்னும்
உயிர் வாழும் அதிசயம்
தாஜ்மகால்

2.

சோற்றுடன் நிலவையும்
பிசைந்து ஊட்டியதால்
ஆனது பிறைநிலா

3.

அறுபடாமலேயே
ஒதுக்கி வைக்கப்படுகிறது
ஒற்றைக் கால் செருப்பு

4.

கடைசி நிமிடத்தையும்
தவறவிட வைக்கும்
துரோகி தயக்கம்

5.

எட்டுத் திக்கும்
ஆட்சி செய்யும்
எல்லாம் பணம்

 

எழுதியவர்

கவிஞர்
மு.ஜெரோஷா
திருப்பூர் மாவட்டம்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *