ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ

Haiku Poems by Jeyasri ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ




பசியோடு பிச்சைக்காரன் வாசலில்
மாடியில் காக்கைக்கு விருந்து
அமாவாசை..

ஆழ்ந்த தூக்கத்திலும்
என்னை தட்டி எழுப்புகிறது
நாளைய நினைப்பு..

மலடியை கடந்து சென்ற
பூனைக்கு பிரசவத்தில் ஆறுகுட்டிகள்
சகுனம்..

ரேசன் சர்க்கரை கிடைக்க
முறையாக வரிசையில்
எறும்புகள்..

பெண்மை இல்லாத வீட்டை
உணர்த்திக் காட்டியது
அடுப்படியில் தூங்கிய பூனை..

தெய்வங்கள் உண்டு
சாட்சிகள் உள்ளது
இரைந்து கிடக்கும் பொம்மைகள்..

தலைவலிக்கான சிகிச்சை
தலைசுற்றல் ஆனது
மருத்துவமனை கட்டணம்..

வேகமாய் துடுப்பினை போட்டும்
முன்னேறவில்லை
படகோட்டி வாழ்க்கை.

வீடு வசதி குறைவென்போம்
இன்னும் சிறியதில் வாழ வேண்டுமே
கல்லறை..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.