1
வெந்து தணிந்த காட்டின்
மூலையில் கொஞ்சம் ஈரம்
ஆறுதல்..
2
கரைகள் இருந்தும்
ஒதுங்கவில்லை
அலைகள்..
3
தீயின்றி புகையின்றி
வேள்வி நடக்கிறது
அவளின் முறைப்பில்..
4
சிக்கலைக் கூட அழகாய்
வெளிப்படுத்துகிறாள் பெண்
வாசல் கோலம்..
5
கடந்து செல்பவர்கள்
கடவுள் தான்
கையேந்துபவர்களுக்கு..
6
எந்த மதத்திலும் இல்லை
மனதில் இருக்கிறார்
கடவுள்
7
மீன் வாங்கச் சென்றால்
முள்ளாய்க் குத்துகிறது
விலை
8
கதிரவனைத் தேடி
கண்ணீருடன் மேகம்
மழை
9
ஒரு நாள் கூத்தில்
ஐந்தாண்டு வாழ்வு
தேர்தல்
10
அவளைச் சேராமல் நிலை
குலைந்து கிடக்கிறது
சேலை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


So good 👍🎉
அனைத்து ைக்கூக்களும் அருமை. காட்சி அழகையும் கருத்தழகையும் காட்டுகின்றன. வாழ்த்துகள்.
இரா. ஜெயலட்சும
சென்னை
இரத்தின சுருக்கமான வார்த்தைகளுடன் அத்தனை கவிதைகளும் அருமை. தேர்ந்த கவிஞர் உங்கள் கவிதையில் மிளிர்கிறார். வாழ்த்துக்கள் தோழி. தொடர்ந்து எழுதுங்கள்.
இரத்தின சுருக்கமான வார்த்தைகளுடன் அத்தனை கவிதைகளும் அருமை. தேர்ந்த கவிஞர் உங்கள் கவிதையில் மிளிர்கிறார். வாழ்த்துக்கள் தோழி. தொடர்ந்து எழுதுங்கள்.