1
குளத்துத் தண்ணீருக்குள்
மிகுந்த குளிர்ச்சியாகத் தெரிகிறது
ஆகாய சூரியன்
2
தேர்தல் நேரம்
கொஞ்சம் கூடுதல் ஆகிறது
வாக்காளருக்குச் செலவு
3
ஞானக் குளியலில்
புதுப் படைப்பு ஆகிறார்
சாயப் பட்டறைக்காரர்
4
அழகான வயல்
வளமையாகக் காட்சி தருகிறது
சாயப்பட்டறையோடு வீடுகள்
5
வயோதிக வீரரைத்
துணையாக அழைத்து வருகிறது
பந்தாட்ட வளைதடி
6
ஏழை குடிசையில்
என்னமாய் ஆனந்தம்
குழந்தையின் ராஜநடை கம்பீரம்
எழுதியவர்

ஜேபி நீக்கிழார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

