*
மலையுச்சிக் கோயில்
வழிநெடுக குரங்குகள்
தாவுகிறது எண்ணம்
*
சரக்கொன்றை உதிரும்
சாலையின் முடிவில்
இடுகாடு
*
பூங்காவில் குயில் பாட்டு
ரசிக்க விடாமல்
அலைபேசி அழைப்பு
*
இலையுதிர் நண்பகல்
வளர்ந்த மரங்களை
நவீன ஓவியமாக்கும் வெயில்
*
தர்பூசணி வெட்டும் கத்தி
கம்பீரமாக அமர்ந்து
சாறு குடிக்கும் ஈ
*
புத்த மடம்
மணியோசையோடு போட்டியிடும்
மியாவ் ஓசை
*
வயலெங்கும் சூரியகாந்தி
மலைகளுக்கு நடுவே பதுங்கும்
அடர் வண்ணப் பரிதி
*
தனிமை விரும்பியின்
சமாதியைச் சுற்றி
அரளிச் செடிகள்
*
குளிர்கால அடி வானம்
மேகத்தைப் போர்த்தி
மெல்ல எட்டிப் பார்க்கிறது சூரியன்
*
பூங்கா நடைப்பயிற்சி
நத்தையின் வழித்தடத்தில்
கிளைகளற்ற மின்னல்
எழுதியவர்
கன்னிக்கோவில் இராஜா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளுக்கு வாழ்த்தும் நன்றியும்.
மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளுக்கு வாழ்த்தும் நன்றியும்.R.S.BALAKUMAR.M.A.,
மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளுக்கு வாழ்த்தும் நன்றியும்